செய்தியும், சிந்தனையும்…!

Viduthalai
1 Min Read
என்ன செய்ய உத்தேசம்?
* மத்தியபிரதேசம் மகாகாலேஸ்வர் கோவில் கருவறை யில் நுழைந்த முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேயின் மகன்.
>>  தப்பு இல்லைதான். எது இடிக்கிறது? ஆக மும், அதனைக் காப்பாற்றும் கூட்டம் – நீதி மன்றங்கள்தானே?
என்ன செய்ய உத்தேசம்?
சக்தி இல்லையோ?
* திருவண்ணாமலையில் பவுர்ணமியன்று கிரிவலம் வருவதைத் தவிர்க்க வேண்டும்.
– மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
>>  வருண பகவானைத் தடுக்க அருணாசலேஸ்வரருக்கு சக்தி இல்லையோ?
அதைப்பற்றி….
* மழை, வெள்ளத்தை தி.மு.க. அரசு அறிவியல் ரீதியாக அணுகவில்லை.
– தமிழிசை சவுந்திரராசன் குற்றச்சாட்டு
>>  அது இருக்கட்டும்! கடந்த ஆண்டு மழை, வெள்ளத்திற்கான நிவாரண நிதியை ஒன்றிய அரசு அளிக்கவில்லையே, அதைப்பற்றி மூச்சு விடுகிறாரா, தமிழிசை?
குப்பைகளை….
* பள்ளிகளில் நன்னெறி வகுப்புகள் நடைபெற வேண்டும்.
– அதிகாரிகளுக்குப் பள்ளி கல்வித் துறை வலியுறுத்தல்.
>>  நன்னெறி என்ற பெயரால், ராமாயணம், மகாபாரதம் முதலிய குப்பைகளைச் சொல்லி கொடுக்காமல் இருந்தால் சரி!
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *