புதுடில்லி, அக் 20 ஜம்மு காஷ்மீருக்கு மாநிலத் தகுதி வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஜம்மு காஷ்மீருக்கு மாநிலத் தகுதி வழங்கக் கோரி ஜாகுர் அகமது பட், குர்ஷாத் அகமது மாலிக் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவித்தார்.