அரியலூர், அக்.19- அரியலூர் மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் 05.10.2024 அன்று காலை 10.30 மணிக்கு ஒன்றிய தலைவர் சிவக்கொழுந்து இல்லத்தில் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் தலைமையில் எழுச்சியோடு நடைபெற்றது.
மாநில சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழக துணை அமைப்பாளர் திராவிடச் செல்வன் வரவேற்று உரையாற்றினார். மாநில சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் நாகை.மு.இளமாறன் திராவிட மாணவர் கழகத்தை பற்றியும், ஏன் திராவிடர் கழகத்தில் இணைய வேண்டும் என்றும் விளக்கி தொடக்க உரையாற்றினார்.
திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கியும், அமைப்புப் பணிகள் குறித்தும் விளக்கி தலைமை உரையாற்றினார்.
தலைமை கழக அமைப்பாளர் க.சிந்தனைசெல்வன், மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகன்,மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாநில ப.க.அமைப்பாளர் தங்க .சிவமூர்த்தி, ஒன்றிய தலைவர் சிவக்கொழுந்து, மாவட்ட இளைஞரணி செயலாளர் தமிழரசன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். ஒன்றிய இளைஞர் அணி தலைவர் மணிகண்டன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களை திரட்டி கருத்தரங்கங்களை நடத்துவது மற்றும் வாயில் கூட்டங்களை நடத்துவது எனவும், உண்மை இதழுக்கு மாணவர் கழகம் சார்பில் சந்தாக்களை திரட்டுவது எனவும், பள்ளி கல்லூரி மாணவர்களிடம் துண்டறிக்கை பிரச்சாரம் செய்வது எனவும், பள்ளி கல்லூரிகளில் திராவிட மாணவர் கழக புதிய கிளைகளை உருவாக்குவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.