ஏ.கே.ராமா னுஜத்தின் ‘முன்னூறு ராமாயணங்கள்’ கட்டுரைக்கு தடை – மொழியியலாளர்கள் எதிர்ப்பு.
“முன்னூறு இராமாயணங்கள்: அய்ந்து உதாரணங்கள் மற்றும் மொழிபெயர்ப்புகள் பற்றிய மூன்று சிந்தனைகள்” என்ற கட்டுரை, பி.ஏ. வரலாறு பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது.
இந்தக் கட்டுரை 300 வெவ்வேறு இராமாயண பதிப்புகளைப் பற்றி விளக்கிக் கூறப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரை மத உணர்வுகளைப் புண்படுத்துகிறது என்ற அடிப்படையில் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பின்னர் இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டது.
அது பல்கலைக்கழகத்திடம் வல்லுநர்களின் கருத்தைப் பெற்று அதை கல்வி மன்றத்தின் முன் வைக்குமாறு உத்தரவிட்டது. ” பல்கலைக்கழகம் அமைத்த குழுவில் உள்ள 4 உறுப்பினர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப் பட்டன,
2008இல், பாஜக ஆதரவு பெற்ற அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின் ஆர்வலர்கள் இராமானுஜன் உரையை கற்பிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வரலாற்றுத் துறைக்குள் புகுந்து அங்கு சேதம் விளைவித்தனர்,
“இந்தக் கட்டுரை இராவணன் சீதையின் தந்தை என்றும், இராமனும் சீதையும் உடன்பிறப்புகள் என்றும் போன்ற விஷயங்களைக் கூறுகிறது. மேலும் தாய்லாந்தில் உள்ள ராமாயணம் இராவணன் சீதையை திருமணம் செய்து அவர்களுக்கு குழந்தைகள் உண்டு என்றும் உள்ளது. அது அங்குள்ள கலாச்சாரத்தை ஒட்டி எழுதப்பட்டது.
ஆனால், ஹிந்து கலாச்சாரத்தை இழிவு செய்வதாகவே இந்த கட்டுரைகள் உள்ளன. எனவே நிச்சயமாக நாங்கள் எங்கள் மாணவர்களுக்கு இதை கற்பிக்க விரும்பவில்லை” என்று பல்கலைக்கழக வலதுசாரி ஆதரவு பேராசிரியர் ஒருவர் கூறினார்.
அதே நேரத்தில் துணைவேந்தரும் எந்த ஒரு ஆலோசனையும் கேட்காமல் உடனடியாக இந்த கட்டு ரையை தடை செய்துவிட்டார். வரலாற்றாசிரியர்களும் எழுத்தாளர்களும் துணை வேந்தரின் முடிவை கடுமையாக எதிர்த்தனர்.
“ஏ.கே. இராமானுஜனின் இராமாயணம் பற்றிய சிறந்த கட்டுரை டில்லி பல்கலைக்கழகத்தால் தடை செய்யப்பட்டுள்ளது நம் அனைவருக்கும் பெரும் அவமானமான விஷயம்” என்று கன்னட எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி தெரிவித்தார்.
“வால்மீகியின் இராமாயணத்தை பாராட்டும் நூலறிஞர்கள் கூட இந்தியாவிற்கு வெளியே இருக்கும் பல இராமாயண கதைகள் பற்றி அறிந்துள்ளனர். அதனை மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பதில் என்ன தவறு என்றும் பல வரலாற்று அறிஞர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
– ‘தி இந்து’, நவம்பர் 17, 2021