ஜார்க்கண்ட் : முதலமைச்சர் சோரன் தலைமையிலான கூட்டணியில் தொடர்வதாக காங்கிரஸ் அறிவிப்பு

1 Min Read

ராஞ்சி, அக்.17- ஜார்க்கண்ட் மாநிலத்தில் பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி கூட்டணியில் தொடா்வதாக காங்கிரஸ் அறிவித் துள்ளது.

அண்மையில் நடைபெற்ற அரியானா சட்டப் பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸால் ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை.

பாஜகவிடம் அக்கட்சி தோல்வி யடைந்தது. ஜம்மு-காஷ்மீா் சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் அள வுக்கு வெற்றி பெற்றபோதிலும், காங்கிரஸுக்கு எதிர்பார்த்த அளவு தொகுதிகளில் வெற்றி பெற முடி வில்லை.
‘இந்தியா’ கூட்டணி கட்சிகளை தோ்தலில் காங்கிரஸ் தவிர்த்ததுதான் அதன் தோல்விக்குக் காரணம் என்று ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமா்சித்தன.

எனவே, அடுத்து நடைபெறவுள்ள மகாராட்டிரம், ஜார்க்கண்ட் பேரவைத் தோ்தல்கள் காங்கிரஸுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இது தொடா்பாக ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவா் கேசவ் மகதோ ராஞ்சியில் செய்தியாளா் களிடம் கூறியதாவது:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணியில் உள்ளது.
அதே கூட்டணி சட்டப் பேரவைத் தோ்தலிலும் தொடரும். தொகுதிப் பங்கீடு தொடா்பான இறுதி முடிவு விரைவில் மேற்கொள் ளப்படும். எங்கள் கூட்டணி வெற்றி பெறும் என்பதை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் ஏற்கெனவே உறுதிபடக் கூறியுள்ளது என்றார்.

ஜார்க்கண்டில் மொத்தம் 81 தொகுதிகள் உள்ளன. இதில் கடந்த 2019 தோ்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அதிகபட்சமாக 30 இடங்களில் வென்றது.

பாஜக 25 இடங்களில் வென்றது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் 16 இடங்களில் வெற்றி பெற்றது. மீதமுள்ள 10 இடங்களில் பிற கட்சிகள் வெற்றி பெற்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *