நீதித் துறை எங்கே செல்லுகிறது? மசூதிக்குள் ‘ஜெய் சிறீராம்’ முழக்கமிடுவது மத உணர்வுகளை புண்படுத்தாதாம்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கருநாடக உயர்நீதிமன்றம்

பெங்களூரு, அக்.17 மசூதிக்குள் ‘ஜெய் சிறீராம்’ என்று முழக்கமிடுவது மத உணர்வுகளைப் புண்படுத்துவது ஆகாது என்று கருநாடக உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கருநாடகாவின் தக்‌ஷிண கன்னடா மாவட்டத்தில் உள்ள மசூதி ஒன்றில் இரவு நேரத்தில் நுழைந்த இரண்டு நபர்கள் ‘ஜெய் சிறீராம்’ என்று முழக்கமிட்டதாகவும், மத ரீதியாக அச்சுறுத்தம் வகையில் பேசியதாகவும் காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் மத உணர்வு களைப் புண்படுத்துதல், அத்து மீறி நுழைதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் மசூதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனை வைத்து அதே பகுதியைச் சேர்ந்த கீர்த்தன் குமார், சச்சன் குமார் என்ற இரு இளைஞர்களை காவல்துறை யினர் கைது செய்தனர்.
தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யுமாறு குற்றம்சாட் டப்பட்டவர்கள் தரப்பில் கருநா டக உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.நாகபிரசன்னா, “பிரிவு 295ஏ என்பது தீங்கிழைக்கும் நோக்கில் எந்தவொரு வகுப்பினரின் மத உணர்வுகளையும், மத நம்பிக்கை களையும் வேண்டுமென்றே அவ மதிப்பதற்காக பதியப்படுவது. ‘ஜெய் சிறீராம்’ என்று முழக்கமிடுவது எப்படி மத உணர்வுகளைப் புண்படுத்தும் என்று புரியவில்லை.

அந்த பகுதியில் இந்துக்களும், முஸ்லிம்களும் நல்லி ணக்கத்துடன் வாழ்வதாக புகார்தாரரே தெரிவித்திருக்கும் நிலையில், இந்த நிகழ்வு மோதலை ஏற்படுத்தும் என்று கூறுவதில் உண்மை இருக்கமுடியாது” என்று தெரிவித்தார்.
மேலும், “295ஏ பிரிவின் கீழ் எந்தவொரு செயலும் குற்றமாக மாறாது என்று உச்சநீதிமன்றம் கூறுகிறது. அமைதியைக் கொண்டுவருவதிலோ அல்லது பொது ஒழுங்கை சீர்குலைப்ப திலோ எந்தப் பாதிப்பையும் ஏற்படுத் தாத செயல்கள் 295ஏ பிரிவின் கீழ் குற்றத்திற்கு வழிவகுக்காது. குற்றத்தின் மூலப்பொருளை கண்டறியாமல், மனு தாரர்களுக்கு எதிராக மேற்கொண்டு நடவ டிக்கை எடுக்க அனுமதிப்பது ‘‘துஷ்பிரயோகம்’’ மற்றும் தவறான நீதிக்கு வழிவகுக்கும்” என்று நீதிபதி தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *