சென்னை, அக்.17- பருவ மழை மீட்பு பணிகள் நடை பெற்று வரும் ஒவ்வொரு பகுதிக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி நேரடியாகசென்று பார்வையிட்டார்.மீட்பு பணிகளில் ஈடுபட்டுவரும் துப்புரவு பணியாளர்களுக்கு உதவிகளையும் வழங்கினார்.
பருவமழை மீட்பு பணிகள்
வடகிழக்கு பருவமழை தொடங்கியதாலும், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்ற ழுத்த தாழ்வு மண்டலம் காரண மாகவும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகன மழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை நீர் தேங்கியது. அவ்வாறு தேங்கிய மழைநீர் உடனடியாக வடிய வைக்கப்பட்டது. தொடர்ந்து சென்னை உள் ளிட்ட மாவட்டங்களில் நடை பெற்று வரும் பருவமழை மீட்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.
செம்பரம்பாக்கம் ஏரி
சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கக் கூடிய செம்பரம்பாக்கம் ஏரியின் நிலவரம் குறித்து துணை முதல மைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற் கொண்டார். அப்போது ஏரியில் தண்ணீர் இருப்பு மற்றும் மதகுகள், ஷட்டர்கள் முறையாக பராமரிக் கப்பட்டுள்ளதா என் பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அவரிடம் ஆய்வு குறித்து செய்தி யாளர்கள் கேட்டபோது, ஏரியில் தண்ணீரே இல்லை என சிரித்த படி அங்கிருந்து கிளம்பி சென்றார்.ஆய்வின்போது அமைச் சர்கள் தா.மோ.அன்பரசன், நாசர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், சிறீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை. காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மனோகரன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இருந்தனர்.
ஆகாயத்தாமரை
அகற்றும் பணி
ரூ.230 கோடி மதிப்பில் பக் கிங்காம் கால்வாயில் 7 இடங்கள், கூவம், கொசஸ்தலையாறு மற்றும் முட்டுக்காடு போன்ற முகத்துவாரங்கள் அடங்கிய 10 இடங்களில் தூர்வாறும் பணி நடக்கிறது. குறிப்பாக கீழ்கட்டளை உபரிநீர் வாய்க்கால் முழுவதையும் ஆக்கிரமித்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அந்த பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வை யிட்டு, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
பாராட்டு
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், ‘கீழ்கட்டளை உபரிநீர் கால்வாயில் ஆகாயத் தாமரைகளை அப்புறப்படுத்த பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவரும் கண்டுகொள்ளவில்லை. இத னால் நீர் வடிந்து செல்ல முடியாமல் தேங்கிக் கிடந்தது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்து பார்வையிட்டார், அதிகாரி களுக்கு போர்க் கால அடிப் படையில் அப்புறப்படுத்த உத்தரவிட்டார். பணிகள் வெகு விரைவாக நடந்து வருகிறது. ‘சபாஷ் துணை முதலமைச்சர்’ என்றனர்.
துப்புரவு பணியாளர்களுக்கு…
தொடர்ந்து அவரது தொகுதியான சேப்பாக்கம் – திருவல்லிக்கேணியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், வடகிழக்கு பருவமழை மீட்பு பணிகளில் இடைவிடாது பணியாற்றி வரும் 600-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு சிற்றுண்டி, பிரட், போர்வை உள்ளிட்ட உதவி பொருள்களை நேற்று (16.10.2024) வழங்கினார். இதையடுத்து தொகுதிக்கு உட்பட்ட மண்டலம் 9-க்கு உட்பட்ட 116-ஆவது வார்டு வெங்கட்ரங்கம் தெருவில் செயல்பட்டு வரும் மாநகராட்சி சமுதாய நலக்கூடத்தில் பொதுமக்களுக்கு உணவு வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள சமையல் கூடத்தில் உணவு சமைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மருத்துவ முகாம்
சமுதாய கூட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமில் உள்ள மருந்துகள் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்ததுடன், முகாமிற்கு வந்திருந்த பொது மக்களிடம் மருத்துவ தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். சிறப்பு மருத்துவ முகாமில் 1 மருத்துவர், செவிலியர், மருந்தாளுநர் உள்பட 6 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளதையும் பார்வை யிட்டார். இந்த நிகழ்வுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மண்டல கண்காணிப்பு அலுவலர் மு.பிரதாப், துணை ஆணையர் (பணிகள்) சிவ. கிருஷ்ணமூர்த்தி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சென்னையை அடுத்த அகரம் தென் ஊராட்சி கஸ்பாபுரம் கணேஷ் நகர், கிருஷ்ணா நகர் பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற வாலிபர், எக்ஸ்தளத்தில் காட்சிப் பதிவை பதிவிட்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்து அதனை ‘டேக்’ செய்திருந்தார். இதனை பார்த்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் அந்த பகுதியில் 15.10.2024 அன்று இரவு முதல் மழை நீரை அகற்றும் பணி நடைபெற்றது.
இந்த பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் கஸ்பாபுரம் பகுதிக்கு வந்து ஆய்வு செய்ததுடன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நிவார ணங்களை வழங்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ், ஊராட்சி தலைவர் ஜெக தீஸ்வரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தனது கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விக்னேஷ் மற்றும் அவரது குடும் பத்தினர் நன்றி தெரிவித்தனர்.