புதுடில்லி, அக்.16- வக்பு வாரிய சட்டதிருத்த மசோதாவை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 2ஆவது நாளாக வெளிநடப்பு செய்தனர். மேலும், மக்களவைத் தலைவருக்கு புகார் கடிதம் அனுப்பினர்.
மசோதா தாக்கல்
நாடு முழுவதும் உள்ள வக்பு வாரிய சொத்துகளை சீர்திருத்தம் செய்யும் நடவடிக்கையாக வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே அம்மசோ தாவை தாக்கல் செய்தது.
பின்னர், நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. பா.ஜனதா எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. அதில், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் இடம்பெற்றுள்ளனர். இதற்கிடையே, 14.10.2024 அன்று ஜெகதாம்பிகா பால் தலைமையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம் நடந்தது. கருநாடக மாநில சிறு பான்மையினர் ஆணைய மேனாள் தலைவர் அன்வர் மணிப்படி ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
2ஆவது நாளாக வெளிநடப்பு
அப்போது அவர், வக்பு வாரிய சொத்துகளை மல்லி கார்ஜூன கார்கே,கே.ரகு மான்கான் உள்ளிட்ட காங்கி ரஸ் தலைவர்கள் அபகரித்த தாககூறினார். அதற்கு எதிர்க் கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தும் அவர் தொடர்ந்து பேச அனுமதிக் கப்பட்டார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி எம். பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில், நேற்று (15.10.2024) மீண்டும் நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டம் நடந்தது. ஒன் றிய சிறுபான்மையினர் விவகார அமைச்சக பிரதிநிதிகள் ஆஜராகி கருத்து தெரிவித்தனர்.
அப்போது, பா.ஜனதா எம்.பி. ஒருவர், எதிர்க்கட்சி எம்.பி.க்களை விமர்சித்ததாக கூறப்படுகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய், திரிணாமுல் காங்கிரஸ் எம். பி. கல்யாண் பானர்ஜி, தி.மு.க. எம்.பி.க்கள் ஆராசா, முகமது அப்துல்லா, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய்சிங். சிவசேனா (உத்தவ்) எம்.பி. அரவிந்த் சவந்த் ஆகியோர் வெளி நடப்பு செய்தனர். தொடர்ந்து 2ஆவது நாளாக அவர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். 1 மணி நேரம் கழித்து அவர்கள் மீண்டும் கூட்டத்தில் பங்கேற் றனர்.
மக்களவைத் தலைவருக்கு கடிதம்
இதற்கிடையே, நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தலையிடக்கோரி அவருக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடிதம் எழுதி உள்ளனர்.
கவுரவ் கோகாய், சையது நசீர் உசேன்,இம்ரான் மசூத் (காங்கிரஸ்), ஆராசா, முகமது அப்துல்லா (தி.மு.க.), அசாது தின் ஒவைசி (அகில இந்திய மஜ்லிஸ்), கல்யாண் பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்) ஆகியோர் அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
வக்பு வாரிய மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அதன் தலைவர் ஜெகதாம்பிகா பால், பாரபட்சமாகவும், கட்சி சார்பாகவும் நடத்தி வருகிறார்.
கருநாடக சிறுபான்மையினர் ஆணைய மேனாள் தலைவர் அன்வர் மணிப்படி, வக்பு மசோதா பற்றி எதுவும் கூறவில்லை. அதற்கு பதிலாக, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை பற்றி அரசியல்உள்நோக்கத்துடன் கருத்துகளை தெரிவித்தார்.
நேரம் அளிப்பது இல்லை
அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அவரை ஜெகதாம்பிகா பால் பேச அனுமதித்தார். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய அவர் போதிய நேரம் அளிப்பது இல்லை. நாடாளுமன்ற நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகிறார். ஆகவே, தாங்கள் உடனே தலையிட்டு, நாடாளு மன்ற விதிமுறைகளை பின்பற்றுமாறு கூட்டுக்குழு தலைவருக்கு நினைவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறி யுள்ளனர்.