பிளேர், அக்.16- அந்தமான் நிகோபரில் கடந்த 2017ஆம் ஆண்டு டி.கே.ஜோஷி ஆளு நராக நியமிக்கப்பட்டதில் இருந்து யூனியன் பிரதேசத்தில் எந்த வளர்ச்சி பணிகளும் செய்யப் படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆளுநர் ஸ்கூபா டைவிங், கோல்ப் மைதானங்களில் கவனம் செலுத்துவதில் ஆர்வமாக இருப்பதாவும் கல்வி, சாலைகள், சுகாதாரம், நிலம் தொடர்பான அனைத்து முக்கிய கோப்புக்கைளயும் அவர் கிடப்பில் போட்டுள்ளதாகவும் பாஜ நாடாளுமன்ற உறுப்பினர் பிஷ்னு பதா ரே குற்றஞ்சாட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஆளுநரை நீக்கக் கோரி ராஜ் நிவாஸ் வரை பேரணி நடத்தினார். மேலும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து வணிக நடவடிக்கைகளையும் மூடி வைக்கும்படியும் பாஜ எம்.பி., கேட்டுக்கொண்டு இருந்தார்.
இந்நிலையில் பேராட்டத்தில ஈடுபட்ட பாஜ எம்.பி. பிஷ்னு பதாய் ரே, ராஜ் நிவாசில் ஆளுநர் ஜோஷியை சந்தித்து பேசினார்.
அப்போது யூனியன் பிரதேசத்தில் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் பயன்பெறும் வகையில் நிலுவையில் உள்ள வளர்ச்சி பணிகளை விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுப்ப தாக ஆளுநர் உறுதியளித்தார்.