16.10.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* மகாராட்டிராவில் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவ.20இல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. 81 உறுப்பினர்கள் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவ.13, 20இல் 2 கட்ட தேர்தல் நடக்கிறது. இங்கு பதிவாகும் வாக்குகள் நவ.23ஆம் தேதி எண்ணப் படும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
* காஷ்மீர் முலமைச்சராக உமர் அப்துல்லா இன்று பதவியேற்பு. திமுக சார்பில் மக்களவை உறுப்பினர் கனிமொழி விழாவில் பங்கேற்கிறார்.
* செப்டம்பர் 9 முதல் நடைபெற்ற சாம்சங்க் தொழிலா ளர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றால், காங்கிரஸ் பங்கேற்கும் ‘இந்தியா’ கூட்டணி, மகாராட்டிரா தேர்தலில் வெற்றி பெறுவது முக்கியம் என்கிறார், கட்டுரையாளர் சிகா முகர்ஜி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*கேரள அரசின் மூத்த அய்பிஎஸ் அதிகாரி எம் ஆர் அஜித் குமார் கூடுதல் காவல்துறை இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு), ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) தலைவர்களுடனான சர்ச்சைக்குரிய சந்திப்பு, ரகசியமாக மூடிய அறையில் நடைபெற்றது என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்த அறிக்கையை முதலமைச்சர் பினராயி விஜயன் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.
தி இந்து:
* உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மூத்த ’ரா’ (R&AW) அதிகாரி, கனடாவில் காலிஸ்தானுக்கு ஆதரவான நபர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் உளவுத்துறை சேகரிப்பை அங்கீகரித்ததாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் கனடா நாட்டு அதிகாரிகள் தகவல் பகிர்ந்துள்ளனர் என வாசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* மகாராட்டிரா தேர்தலில் மராத்தா, ஓபிசி மற்றும் தங்கர் சமூகத்தினரின் போராட்டங்கள், மக்களவைத் தேர்தலை போலவே மாநிலத்தில் வாக்குப்பதிவு முறைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தி டெலிகிராப்:
* எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள அரசு நடத்தும் பல்கலைக்கழகங்களில், ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் ஆளுநர்கள் மூலம் செயல்படுத்த முற்படுவதாக கல்வி சுதந்திர கண்காணிப்புத் திட்டத்தில் அறிஞர்களின் (SAR) அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
* மகாராட்டிரா சட்டமன்ற தேர்தல் அட்டவணை அறிவிப்புக்கு முன்னதாக, அதானி குழுமத்திற்கு சலுகைகளை அள்ளி வீசி உள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு.
– குடந்தை கருணா