சென்னை,அக்.16- சாம்சங் தொழிலாளர்கள் 37 நாட்களாக போராடி வந்த நிலையில், அமைச்சர்களின் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக அக்.14 மற்றும் 15 ஆகிய இரண்டு நாட்களாக சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன்,டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் தலைமையில் தொடர்பான துறைகளின் அரசு அலுவலர்கள் சாம்சங் நிர்வாகம் மற்றும் சிஅய்டியு சங்கத் தலை வர்களுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில், சாம்சங் தொழிலாளர்களின் நலனைக் கருதி ஆலை நிர்வாகம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் பிரதிநிதிகளிடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டது.
அ.சவுந்தரராசன் பேட்டி
இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சிஅய்டியு மாநிலத் தலைவர் அ.சவுந்த ரராசன், ‘‘இன்றைய நாள் நடந்த பேச்சுவார்த்தையில் 4 அமைச்சர்கள் மற்றும் தொழிலாளர் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆரம்பத்தில் இருந்து பேச்சுவார்த்தை சுமூகமாக சென்றது. இதில் சில நல்லஆலோசனைகளும், முடிவுகளும் எட்டப்பட்டன.இந்தப் பேச்சு வார்த்தையில் எந்தப் பின்னடைவும் ஏற்படவில்லை. எந்த குழப்பமும் இல்லை. வேறு பிரச்சினையும் கிடையாது.சிறப்பாக நடைபெற்றது. இன்று (16.10.2024) சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் (சிஅய்டியு) பேரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு, நல்ல முடிவு எட்டப்படும்” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர்,
“சங்கத்தைப் பதிவு செய்யும் விவ காரம் நீதிமன்றத்தில் உள்ளது. எனவே, அந்த தீர்ப்புக்கு நாங்கள் கட்டுப்படுவோம் என்று ஏற்கெனவே அறிவித்துவிட்டோம். அதையே இப்போதும் சொல்கிறோம்.
மிக மிக முக்கியமானது, நிர்வாகத்திற்கும், எங்கள் சங்கத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. பொறுப்பு இருக்கிறது. அதைத்தான் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். சாம்சங் நிர்வா கம் ஆரம்பத்தில் இருந்து எதையும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தது. எங்கள் சங்கத்துடன் பேசவே மறுத்து வந்தனர். ஆனால், அமைச்சர்களின் அழுத்தம் மற்றும் மாநில அரசின் முயற்சி காரணமாக நாங்கள் முன்வைத்தி ருக்கும் சில கோரிக்கைகள் மீது செவி சாய்த்திருக்கிறார்கள். இதில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.
எனவே, முதலமைச்சர் எடுத்த முயற்சிக்கு பாராட்டு தெரிவிக்கிறோம். சாம்சங் நிர்வாகம் எங்களுடன் பேச வேண்டும் என்று வலியுறுத்தினோம். தற்போது, எங்களோடு என்ன பேச வேண்டும் என்பதுகுறித்து சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
இதில் சுமூக உடன்பாடு எட்டப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் நடத்தும் பேரவையில் எடுக்கும் முடிவை செய்தியாளர்களுக்கு முறைப்படி அறிவிப்போம்” என்றும் அவர் கூறினார்.
“தொழிலாளர்கள் வேலைக்குச் செல்வது குறித்து பேரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். நாளை மறுநாள் கூட வேலைக்குச் செல்ல தொழிலாளர்கள் தயாராக உள்ளனர். இதில் எந்த பிரச்சினையும் இல்லை” என்றும் அ.சவுந்தரராசன் தெரிவித்தார்.
அரசு அறிக்கை
இதற்கிடையில், அரசு சார்பில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சாம்சங் தொழிலாளர் போராட்டத்தை விரைந்து முடிவுக்குக் கொண்டுவர நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி, தொழில் அமைதி மற்றும் பொது அமைதி காக்கும் வகையில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை உடனடியாக கைவிட்டு பணிக்குச் செல்லவேண்டும். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பும் போது நிர்வாகம் எவ்வித பழிவாங்கும் நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாது. வேலைநிறுத் தத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்பும் தொழிலாளர்கள் நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மேலும் நிர்வாகத்திற்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது. தொழிலாளர்கள் முன்வைத்த ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கையின் மீது நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக பதிலு ரையை சமரச அலுவலர் முன்பு தாக்கல் செய்ய வேண்டும்.
இதனால், சாம்சங் தொழிற் சாலை யில் நடைபெற்று வந்த வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது, தொழிலாளர்கள் அனைவரும் பணிக்குத் திரும்ப உள்ளார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.