சென்னை, ஆக.1 திராவிடம் பற்றிய பேச்சு பிரிவினையை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா ஒன்றில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: பாரதம் வலுவாக இருக்க வேண்டும். அதற்கு தீனதயாள் உபாத்யாயா தத்துவம் இருக்க
வேண்டும். 1956-இல் சென்னைப் பட்டினம் சென்னை மாகாணம் என்றே அழைக்கப்பட்டு வந்தது. பல்வேறு மொழிகள் பேசுபவர்களும் வசித்தனர். ஆனாலும் மொழிப் பாகுபாடின்றி நடுநிலையோடுதான் வாழ்ந்தனர்.1956, நவம்பரில் சென்னை மாகாணத்திலிருந்து கருநாட கம், ஆந்திரம் என மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. முன்பு எல்லாம் திரா விடம் மற்றும் ஆரியம் பற்றி இந்த அளவுக்கு பேச்சு இல்லை. தற்போது திராவிடம் பற்றிய பேச்சு பிரிவினையை பிரதிபலிக்கிறது என்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி.