13,080 அணுகுண்டுகள்! 3ஆம் உலகப்போருக்கு ஆயத்தமா?

2 Min Read

லண்டன், அக். 15– 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி உலக வரலாற்றில் யாரும் மறக்க மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத உலகின் முதல் அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இது மனித நாகரிகத்தின் போர் வரலாற்றின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று. 2ஆம் உலகப் போரின்போது ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதல் தான்.

அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதலால் ஏற்பட்ட உயிரிழப்பு, கதிர்வீச்சு பாதிப்பு ஆகியவற்றால் அந்த ஆண்டின் இறுதியில் பலி எண்ணிக்கை மட்டும் 1,40,000-ஆக அதிகரித்தது.

குறிப்பாக, அந்த அணுகுண்டு தாக்குதலின் கதிர்வீச்சு பாதிப்புக் குள்ளானவர்களின் சந்ததியினர் தலைமுறை தலைமுறையாக உயிரியல் குறைபாட்டுடன் பிறந் தனர். மேலும் அந்த தாக்குதல் மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த குண்டுகளின் கொடிய பின் விளைவுகளை இன்னும் உணர முடிகிறது.

இத்தகைய அழிவை ஏற்படுத்திய அமெரிக்காவே போரில் அணு குண்டைப் பயன்படுத்திய முதலும், கடைசியுமான நாடு. அமெரிக்காவால், மனித இன வரலாற்றில் நிகழ்ந்த மிக கொடூர மான இந்த நிகழ்வு, உலகளாவிய ஆயுதக் குறைப்பு மற்றும் அமைதி ஆகிய முயற்சிகளுக்கு வழிவகுத்தது. இதுவே, அணுசக்தி இல்லாத உலகம் என்ற எண்ணத்தை நோக்கி நகர வைத்தது.

இந்த நிலையில், 3ஆம் உலகப் போர் மூளும் அபாயம் ஏற்பட் டுள்ளது. அதன் ஒருபகுதியாக இஸ்ரேலும் – ஈரானும் தாக்குதல் களை நடத்தி வருகின்றனர். இருப் பினும், இஸ்ரேலும் ஈரானும் நேரடிப் போரில் ஈடுபடவில்லை. ஆனால், இருவரும் நேரடியாக சண்டையிட்டால் என்ன நடக்கும்? இஸ்ரேலிடம் சுமார் 70 அணு குண்டுகள் இருப்பதாகக் கூறப் படுகிறது.

சமீபத்திய தரவுகளின்படி, தற்போது உலகம் முழுவதும் மொத்தம் 13,080 அணுகுண்டுகள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவை 13 ஆயிரம் கிமீ முதல் 15 ஆயிரம் கி.மீ. தூரம் வரை தாக்கும் சக்திகொண்டவை என்றும் இந்த அணுகுண்டுகளில் பாதி பயன்படுத்தப்பட்டால், உலகம் முழுவதும் அழிந்துவிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத் துள்ளனர்.

எந்த நாட்டில் எத்தனை அணு குண்டுகள் உள்ளன? ரஷ்யா – 6257, அமெரிக்கா – 5550, பிரான்ஸ் – 290, சீனா – 350, இங்கிலாந்து – 225, பாகிஸ்தான் – 165, இந்தியா – 156, வட கொரியா – 50 அணுகுண்டுகளை வைத்துள்ளன. இருப்பினும், 11 ஆயிரம் முதல் 15 ஆயிரம் கிமீ வரையிலான தொலைதூரத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் மற்றும் அதிக எண்ணிக்கையிலான அணு ஆயுதங்களை ரஷ்யா கொண் டுள்ளது. அமெரிக்காவால் 9650 கி.மீ. முதல் 13 ஆயிரம் கி.மீ. தூரம் வரை அணுகுண்டுகளை ஏவ முடியும்.

பனிப்போர் காலத்திலிருந்து, உலகம் இரண்டு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து, மேற்கு அய்ரோப்பா மற்றும் மத்திய கிழக்கின் பெரும்பகுதி உட்பட அமெரிக்காவின் தலைமையிலான மேற்கத்திய நாடுகளை ஒரு தொகுதி கொண்டுள்ளது.

மற்ற குழுவில் கிழக்குப் பகுதி யைச் சேர்ந்த நாடுகள் உள்ளன. இந்த நாடுகளில் ரஷ்யா, சீனா, வடகொரியா, ஈரான் மற்றும் பசிபிக் நாடுகளில் இருந்து சில நாடுகள் அடங்கும். இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை. ஏனெனில் போர் ஏற்பட்டால் அவர்களின் நிலைப்பாடு என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *