தென்காசி, அக்.15 கடந்த 26.9.2024 அன்று தென்காசி மாவட்டம் சுரண்டையில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, தந்தை பெரியார் 146 ஆவதுபிறந்நாள்விழா , தந்தை பெரியார் 146 ஆவதுபிறந்தநாள் மலர்வெளியீடு விழா மற்றும் சுரண்டையில் நடைபெற்ற கழகக் கூட்டத்தில் கலவரத்தில் ஈடு பட்ட காவிக்காலிகளை கண்டித்து பொதுக்கூட்டம் எழுச்சியோடு நடை பெற்றது.
மாவட்டச் செயலாளர் கை.சண்மு கம் வரவேற்புரையாற்றினார். மாவட்டத்தலைவர் வழக்குரைஞர் த.வீரன் தலைமை வகித்தார்.
அறிவாசான் தந்தையார் 146 ஆவது பிறந்தநாள் விழா மலரின் சிறப்பினை விளக்கிக் கழகக் காப்பாளர் சீ.டேவிட்செல்லத்துரை அறிமுகவு ரையாற்றினார்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பகுத்தறிவாளர் வே.செயபாலன் மலரினை வெளி யிட்டு காவிக் கூட்டத்தின் இழி செயலைக் கண்டித்தும், திராவிட இயக்கத்தின் பெருமைகளை விளக்கி யும் அருமையானதொரு உரை நிகழ்த்தினார்.
கழகப் பேச்சாளர் ஆரூர் தேவ.நர்மதா மிகச் சிறப்பாக எழுச்சியுரையாற்றினார். சிறப்புரையாற்றிய கழக சொற்பொழி வாளர் இரா.பெரியார்செல்வன் காவிக் காலிகளைக் கண்டித்து சிறப்புரை யாற்றினார். நிறைவாக மாநில இளைஞரணி துணைச்செயலாளர் அ.சவுந்தரப்பாண்டியன் நன்றியுரை யாற்றினார்.