ஒருவன் எப்படிப்பட்டவனானாலும் அவன் பணம் செலவு செய்வதால் காலிகளைக் கைவசப்படுத்திக் காலித்தனம் செய்வதால் யாரும், எப்படிப்பட்டவர்களும் ஸ்தல ஸ்தாபனங்களைக் கைவசப்படுத்திக் கொண்டு, தான் செலவிட்ட பணத்தையும் வட்டியுடன் எடுத்துக் கொண்டு தனக்கு உதவி செய்த காலிகளுக்கும் தாராளமாய் அனுகூலம் செய்து விட்டு மேல் கொண்டும் புதையல் எடுப்பது போல் பணமும், செல்வாக்கும் சம்பாதித்துக் கொள்ளுவதற்கு ஏற்ற ஆட்சி, ஸ்தாபனம் இவற்றால் சமுதாயக் கேடே ஏற்படுமன்றி என்ன நன்மைகள் கிடைக்கும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’