மதுரை, அக்.14 மதுரை புறநகர் மாவட்டம் திருமங்கலம் கொடி அரங்கத்தில் நேற்று (13.10.2024) காலை 10 மணிக்கு திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 45 ஆவது மாவட்டமாக நடைபெற்றது
தொடக்க விழா நிகழ்வுக்கு மாவட்டத் தலைவர் த.ம.எரிமலை தலைமையேற்று உரையாற்றினார்.மாவட்டச் செயலாளர் பா.முத்துக் கருப்பன் அனை வரையும் வரவேற்று உரையாற்றினார்.
மாநில வழக்குரைஞரணி செயலாளர் மு.சித்தார்த்தன், மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர் நா.கணேசன், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் வீரராகவன் தங்கத்துரை, திருமங்கலம் நகரத் தலைவர் மு.சண்முகசுந்தரம், திருமங்கலம் நகர செயலாளர் சி.பாண்டியன், மாவட்ட மகளிரணி செய லாளர் இரா.கலைச்செல்வி,பொதுக்குழு உறுப்பினர் அ.மன்னர்மன்னன், மாவட்ட மாணவர் கழக தலைவர் ம.ரஞ்சித்குமார் மாவட்ட மாணவர் கழக துணைச் செயலாளர் ச.அறிவுச்செல்வி, மாவட்ட மாணவர் கழக செயலாளர் பா.சதீஷ்குமார், மாவட்ட மாணவர் கழக துணைத் தலைவர் ச.அறிவுபாண்டி, மாவட்ட காப்பாளர் ரோ.கணேசன், தொழிலாளர் பேரவை மாநில தலைவர் கா.சிவகுருநாதன், மாவட்ட மகளிரணி தலைவர் பாக்கிய லட்சுமி,தஞ்சை மாநகர துணை செயலாளர் இரா.இள வரசன். ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.
தலைமைக் கழக அமைப்பாளர் மதுரை
வே. செல்வம் பயிற்சிப் பட்டறை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
பகுத்தறிவாளர் கழக ஊடகப் பிரிவு மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமி ‘‘தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு’’ என்ற தலைப்பில் முதல் வகுப்பை நடத்தினார்.
‘‘சமூக நீதி வரலாறு’’ என்ற தலைப்பில் முனைவர் வா.நேருவும், ‘‘பார்ப்பன பண்பாட்டு படையெடுப்பு’’ என்ற தலைப்பில் முனைவர் அதிரடி அன்பழகனும், ‘‘இந்து-தமிழர்-திராவிடர்’’ என்ற தலைப்பில் பிரின்சு என்னாரெசு பெரியாரும், ‘‘தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் சாதனைகள்’’ என்ற தலைப்பில் வி.சி.வில்வமும், ‘‘மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்கம்’’ என்ற தலைப்பில் ஈட்டி கணேசனும், ‘‘தந்தை பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனைகள்’’ என்ற தலைப்பில் பிரின்சு என்னாரெசு பெரியாரும் வகுப்புகளை நடத்தினர்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் பயிற்சிப் பட்டறையை ஒருங்கிணைத்து நடத்தினார்.
பயிற்சி பெற்ற மாணவர்களின் விவரம்
பெரியார் பயிற்சிப் பட்டறையில் 63 மாணவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
ஆண்கள்-39 பெண்கள்-24
கல்லூரி மாணவர்கள்-17
பள்ளி மாணவர்கள்-46 மேற்கண்ட விவரப்படி மாணவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
அனைத்து மாணவர்களுக்கும் திருமங்கலம் நகர் மன்ற தலைவர் முத்துக்குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டி உரையாற்றினார்.
பரிசு பெற்ற மாணவர்கள்
வகுப்பை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பெடுத்த அய்ந்து மாணவர்களைத் தேர்ந்தெடுத்து புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன
முதல் பரிசு – மாணிக்கவள்ளி,
இரண்டாவது பரிசு – எம்.சந்தோஷ்,
மூன்றாவது பரிசு – ரா.செம்மொழி பிரபா,
நான்காவது பரிசு – வா.திவாசினி,
அய்ந்தாவது பரிசு – கப்பலூர் இரா.அன்புச்செல்வன்.
பரிசு பெற்ற மாணவர்களுக்கு நகர் மன்ற தலைவர் புத்தகங்களை பரிசாக வழங்கிச் சிறப்பித்தார்
2,860 ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன.
பயிற்சியில் பங்கேற்று சிறப்பித்த இருபால் மாணவர்கள் பயிற்சிப் பட்டறையின் சிறப்பு குறித்து கருத்துகளைத் தெரிவித்தனர்.
திருமங்கலம் நகரத் தலைவர் சண்முகசுந்தரம் நிறைவாக நன்றி கூறினார்.
மாணவர்கள் கழகப் பொறுப்பாளர்கள் அனைவரும் குழுப் படம் எடுத்துக் கொண்டனர்.
பாராட்டு
பயிற்சிப் பட்டறையை மிகச் சிறப்பாக நடத்திய மாவட்டத் தலைவர் எரிமலை, மாவட்ட செயலாளர் முத்து கருப்பன், சிறப்பான ஒத்துழைப்பு வழங்கிய பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் விஜயராகவன், தங்கத்துரை, மாவட்ட மகளிரணி செயலாளர் கலைச்செல்வி, திருமண மண்டப உரிமையாளர் கவிராஜன் மற்றும் கழகப் பொறுப்பாளர்களுக்குப் பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கழகக் கொடிகள் ஏராளமாகக் கட்டப்பட்டிருந்தன. திராவிடர் கழக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் வெளியிடப்பட்ட கழகக் கொள்கைகளை தாங்கிய பதாதைகள் வைக்கப்பட்டிருந்தன.
தந்தை பெரியார் 146 ஆவது பிறந்தநாள் ‘விடுதலை’ மலர் அறிமுகம்
13.10.2024 அன்று திருமங்கலம் கொடி அரங்கத்தில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறை யில் தந்தை பெரியார் 146 ஆவது பிறந்தநாள் விடுதலை மலர் அறிமுகம் செய்யப்பட்டது
திராவிடர் கழக வழக்குரை ஞரணி செயலாளர் வழக்குரைஞர் மதுரை மு.சித்தார்த்தன் அறிமுகம் செய்து வெளியிட்டார்
வழக்குரைஞரணி மாநில துணைச்செயலாளர் வழக்குரைஞர் நா.கணேசன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்
பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் முனைவர் வா.நேரு, மதுரை புறநகர் மாவட்ட தலைவர் த.ம.எரிமலை, மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் பா. முத்துக்கருப்பன், பொதுக்குழு உறுப்பினர் அ.மன்னர்மன்னன் மாவட்ட துணைத் தலைவர் சிங்கராசு, பகுத்தறிவாளர் கழக ஊடகப்பிரிவு மாநில தலைவர் மா. அழகிரிசாமி, வேம்பத்தூர் ஜெயராமன், பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் திருமங்கலம் விஜயராகவன் தங்கதுரை, திரு மங்கலம் நகர செயலாளர்
சி. பாண்டியன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், கழகத் துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், தலைமைக் கழக அமைப்பாளர் வே.செல்வம், கிராமப் பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், திராவிடர் கழக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் வி. சி.வில்வம், தொழிலாளர் பேரவை மாநில தலைவர் சிவகுருநாதன், திண்டுக்கல் ஈட்டி.கணேசன், தஞ்சை மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன், மாவட்ட மகளிரணி தலைவர் பாக்கியலட்சுமி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் கலைச்செல்வி ஆகியோர் உடனிருந்தனர்.