தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா (17.9.2024) தமிழ்நாடெங்கும் கழகத் தோழர்கள் எழுச்சியுடன் கொண்டாடினர். அதன் விவரம் வருமாறு:
தரமணியில்…
தரமணி தந்தை பெரியார் நகரில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு காலை 8. 30மணி அளவில் தென் சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் கலைஞர் கருணாநிதி நகர் கரு.அண்ணாமலை, மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி முன்னிலையில் மாவட்ட இளைஞரணி தலைவர் துரை.அருண் மாலை அணிவித்தார்.
துணை செயலாளர்கள் கோ.வீ.ராகவன்,சா.தாமோதரன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ந.மணித்துரை, தொழிலாளர் அணி தலைவர் ச. மாரியப்பன், இளைஞர் அணி துணை செயலாளர் இரா. மாரிமுத்து, மா.இன்பக்கதிர், சுப்பிரமணியன், கண்ணன், சுரேஷ் மணிமொழியன், செயசீனன், மூவேந்தன், விருகை செல்வம், மணிபாரதி, வழக்குரைஞர் அ.அன்பரசன், சரவணன், தமிழ் பிரபா, பவித்ரா, புரட்சி தமிழன், ஜெ.ஜனார்த்தனம், த.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தியாகராயர் நகர் பேருந்து நிலையம் எதிரில்…
தியாகராயர் நகர் பேருந்து நிலையம் எதிரில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு காலை 9. 30 மணி அளவில் தென் சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில், மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, அமைப்பாளர் மு.ந. மதியழகன் மற்றும் துணைத் தலைவர் டி. ஆர் .சேதுராமன் ஆகியோர் முன்னிலையில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மாலை அணிவித்தார். மாவட்ட இளைஞரணி தலைவர் துரை.அருண், துணை செயலாளர்கள் கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், சூளைமேடு நல். ராமச்சந்திரன், இளைஞர் அணி செயலாளர் ந.மணித்துரை, தொழிலாளர் அணி தலைவர் ச. மாரியப்பன், இளைஞர் அணி அமைப்பாளர் பெரியார் யுவராஜ், இளைஞர் அணி துணை செயலாளர் இரா. மாரிமுத்து,கலைஞர் கருணாநிதி நகர் கரு .அண்ணாமலை, மா.இன்பக்கதிர், சுப்பிரமணியன், கண்ணன், சுரேஷ், மணிமொழியன், செயசினன், மூவேந்தன், விருகை செல்வம், மணிபாரதி, வழக்குரைஞர் அ.அன்பரசன், சரவணன், தமிழ் பிரபா, பவித்ரா, புரட்சி தமிழன், ஜெ.ஜனார்த்தனம், த.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
சோழிங்கநல்லூர்
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 146 ஆம் ஆண்டு பிறந்த நாளான 17.9.2024 அன்று விடுதலை நகர் நூலகத்தில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
அடுத்து நங்கநல்லூர் பகுதியில் அமைந்துள்ள பெரியார், அண்ணா சிலைகளுக்கு தோழர்கள் புடைசூழ மாலைகள் அணிவித்து சமூக நீதி நாள் உறுதி மொழிஏற்றனர். அங்கு கூடியிருந்த கழகத் தோழர்கள் மற்றும் திமுக 12ஆவது மண்டல குழு தலைவரும், சென்னை மாநகராட்சி 166 வட்ட மாமன்ற உறுப்பினர் சந்திரன் உட்பட ஏராளமான தோழர்கள் உறுதி ஏற்றுக்கொண்டு நிகழ்ச்சியை சிறப்பு செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் தமிழினியன், மாணவர் கழகம் ஜெ.குமார், மகளிர் அணி தேவி, சக்திவேல், கோவிலம்பாக்கம் சாந்தி, விஜயலட்சுமி தமிழினியன், மேடவாக்கம் வெற்றிவீரன், தொழிலாளர் அணி மணிகண்டன், பெரியார் பிஞ்சு பொற்செழியன் உட்பட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
பையர்நத்தத்தில்…
அரூர் கழக மாவட்டம்,பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் ,பையர்நத்தம் கிளைக் கழகம் சார்பாக தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்த நாளை முன்னிட்டு புதிதாக கொடி கம்பம் அமைக்கப்பட்டு கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடத்தப்பட்டது. ஒன்றிய பொறுப்பாளர் பொன். அய்யனார் தலைமை தாங்கினார். .மாவட்ட செயலாளர் தங்கராசு முன்னிலை வகித்தார்.
மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதி கொடியேற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். நிகழ்வில் இளைஞர் அணி சாய்குமார், கிளை கழக அமைப்பாளர் சிலம்பரசன், திமுக நரேஷ், வி.சி.க வேலாயுதம், மாரியப்பன் ப.க,முல்லைஅரசு, மருத்துவ அலுவலர் அம்பேத்கர், முருகேசன் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
இடைப்பாடியில்…
மேட்டூர் மாவட்ட இடைப்பாடி நகர கழகத்தின் சார்பில் இடைப்பாடி பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியாரின் 146 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் தலைமைக் கழக அமைப்பாளர் கா.நா.பாலு தலைமையேற்று கழக கொடியினை ஏற்றினார்.முன்னிலை சத்தியநாதன் பெரியார் பெருந்தொண்டர் மெ.காமராசு பெரியார் படிப்பக காப்பாளர் ரவி நகர செயலாளர் இனிப்பு வழங்கினார். அனைவரையும் சி.மெய்யானருள் நகர செயலாளர் வரவேற்றார்.
உறுதி மொழி வாசித்து சிறப்புரையாற்றிய.மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் இடைப்பாடி கோவி.அன்புமதி வழங்கினார். தந்தை பெரியாரின் தொண்டுக்கு நன்றி செலுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். நன்றியுரை சண்முகசுந்தரம் நகர துணைத்தலைவர் நன்றியுரை கூறினார்.
கடைமடை
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியத்தில் பொதுக்குழு உறுப்பினர் அ.தீர்த்தகிரி தலைமையில் கடைமடையில் தீபிகா கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ஈ.எம்.மாதையன், கே.ஆர்.குமார், மு.சங்கரன், மு.கோவிந்தராஜ், அழகேசன், திமுக நிர்வாகிகள் கவுன்சிலர் சின்னக்கண்ணு, கோவிந்தன், நாகராஜ், சசிகுமார், சி.பி.எம். நிர்வாகிகள் சாம்ராஜ், மகளிர் அணி சார்பில் சுசீலா தீர்த்தகிரி, ஜெயா பழனியம்மாள், கண்ணம்மா, புஷ்பா, சத்தியா, கருப்பாயி ஆகியோர் கலந்துகொண்டனர்.
பொதுக் குழு் உறுப்பினர் தீர்த்தகிரி ரைஸ் மில் அருகில் ஈ.எம். மாதையன் கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கப்பட்டது.
பென்னாகரம்
பென்னாகரம் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரே உள்ள பெரியார் சிலைக்கு பொதுக்குழு உறுப்பினர் தீர்த்தகிரி தலைமையில் டாக்டர் தியாகராஜன், திமுக பேரூராட்சி தலைவர் வீரமணி, திமுக ஒன்றிய அமைப்பாளர் காளியப்பன் உட்பட மக்கள் அதிகாரம் அமைப்பினர் சத்தியராஜ், கோபிநாத், வெங்கடேசன், சிபிஎம் தோழர்கள் சாம்ராஜ், சத்தீஷ் மற்றும் அதிமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய முஸ்லிம் லீக் சார்பில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இறுதியில் பென்னாகரம் பேரூராட்சி தலைவர் வீரமணி தேநீர் மற்றும் இனிப்புகள் வழங்க ஏற்பாடு செய்து இருந்தார்.
பெரியார் நகர்
பென்னாகரம் ஒன்றியத்தில் பொறுப்பாளர் மு.சங்கரன் தலைமையில் கழகக் கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கப்பட்டது.
பருவதன அள்ளி பெரியார் சமத்துவ புரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு ஒன்றியத்தின் செயலாளர் அழகேசன் தலைமையில் முனியப்பன், திமுக கோவிந்தன் உட்பட சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது நிகழ்ச்சியின் இறுதியில் இனிப்பு வழங்கப்பட்டது.
மருங்கூர்
நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், மருங்கூரில் அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்த நாள் – சமூக நீதி நாள் விழா, கொள்கை முழக்கத்தோடு திராவிடர் கழக இலட்சிய கொடியேற்றியும், மருங்கூர் கடைவீதியில் இயக்க பிரச்சாரத்தோடும் பெரியார் பிறந்த நாள் விழா குடும்ப விழாவாக எழுச்சியோடு கொண்டாடப்பட்டது.
அறந்தாங்கி
பெரியார் பிஞ்சுகள் நடத்திய உலகத் தலைவர் தந்தைபெரியார் அவர்களின் 146ஆவது பிறந்தநாள் விழா நெய்வத்தளி செம்மொழி தோட்டத்தில் எழுச்சியோடு நடைபெற்றது பெரியார் பிஞ்சு செம்மொழி மற்றும் செம்மகிழன் ஆகியோர் ஏற்பாட்டில் 25க்கும் மேற்பட்ட பெரியார் பிஞ்சுகள் பங்கேற்ற இந்த விழாவில் பொதுக்குழு உறுப்பினர் சவுந்தரராஜன், மாவட்ட மகளிர் அணி தோழியர் ஞானாம்பாள், ஆசிரியர் மாலதி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் வீரையா ஆகியோரும் பங்கேற்று சிறப்பான முறையில் மாணவர்களுக்கு தந்தை பெரியாரைப் பற்றிய சிந்தனையை விரிவாக எடுத்துரைத்தார்கள். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கபட்டது மாணவர்கள் அனைவருக்கும் பேனா பென்சில்கள் வழங்கப்பட்டன விழா எழுச்சியோடு நடைபெற்றது.
பொன்னமராவதி
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாள் விழா பொன்னமராவதியில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்புடன் நடைபெற்றது.இதில் அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற விழாவில் திராவிடர் கழக ஒன்றிய தலைவர் சித.ஆறுமுகம் தலைமை வைத்து திராவிடர் கழக கொடியை ஏற்றி வைத்தார் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் அடைக்கல மணி மற்றும் ஆலவயல் முரளி சுப்பையா, சிபிஅய் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஏனாதி ராசு, சிபிஎம் ஒன்றிய செயலாளர் பக்ருதீன், சிஅய்டியு நிர்வாகி தீன்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலாளர் சுடர்வளவன், நகரச் செயலாளர் தேவேந்திரன், மணிமுத்து, மே 17 இயக்க ஹைதர் அலி, திராவிடர் கழக நிர்வாகிகள் பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் சரவணன்,மாவட்ட துணைச் செயலாளர் ஆசைதம்பி,ஒன்றிய துணைத் தலைவர் ஆறுமுகம்,ஒன்றிய துணைச் செயலாளர் மனோகரன், இளைஞரணி நாகார்ஜுன், விநாயகமூர்த்தி, மாணவரணி மாவட்டத் தலைவர்குட்டி வீரமணி,புனிதா பாலச்சந்தர்,பெரியார் பிஞ்சுகள் புரட்சியாளன், பெரியார் சமரன் ஆகியோர் பங்கேற்று தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்று பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். திராவிட கழகத்தின் ஒன்றிய செயலாளர் மாவலி நன்றி கூறினார்.
நெய்வேலி
நெய்வேலியில் தந்தை பெரியார் படிப்பகம் மற்றும் வீரமணி நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் 94ஆவது நிகழ்வாகவும், தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாள் சிறப்பு கருத்தரங்கம் வடக்குத்து அண்ணா கிராமத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு கழக ஒன்றிய தலைவர் கனகராசு தலைமை தாங்கினார். கிளை தலைவர் தங்க.பாஸ்கர் வரவேற்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் பகுத்தறிவாளர் கழக கடலூர் மாவட்ட செயலாளர் அருணாச்சலம் கலந்துகொண்டு பெரியார் பார்வையில் ஜாதி என்னும் தலைப்பில் பேசியதாவது; தந்தை பெரியாரின் பார்வையில் ஜாதி என்பது அகற்றப்பட வேண்டிய ஒன்றாகும் என பல்வேறு தளங்களில் தெளிவாக கூறியிருக்கிறார்.ஆனால் சிலர் இதை தவறாக விமர்சனம் செய்து வருகின்றனர். சங்க காலங்களில் ஜாதி என்ற வார்த்தையே இல்லை. தமிழர்களின் பண்பாட்டிலும் ஜாதி என்பது இல்லை. அய்ரோப்பாவில் இருந்து வெளியேறிய நான்கு குழுக்களின் இந்தியாவின் வடமேற்கு பகுதியில் குடியேறிய ஒரு குழுவினரே ஜாதி என்பதை உணர்த்தினர்.
முன்னதாக அவர்களே கைபர் போலன் கனவாய் வழியாக இந்திய மண்ணில் நுழைந்தவர்கள் என பரிதிமாற் கலைஞர் தான் எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ளார். 1915ஆம் ஆண்டு அமெரிக்க பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் ஜாதி குறித்து தர்க்க ரீதியாக கருத்தியல் அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். ஆனால் பெரியார் 1909ஆம் ஆண்டு பல்வேறு தளங்களில் அன்றைய இளைஞர்கள் பார்வையில் ஜாதி என்பதை கொண்டு சென்று ஒரு தெளிவினை ஏற்படுத்தி உள்ளார். நான்காயிரம் கோடி மக்களுக்கான தேவையான கருத்துகளை 4 கோடி மக்கள் பேசும் மொழியிலே தனது சமூக சிந்தனை சீர்திருத்தத்தை பெரியார் வெளிக்கொண்டு வந்தார்.
அடுத்த தலைமுறைக்கு நல்லவற்றை கொண்டு செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கோடு பல்வேறு கருத்துகளை அவர் இந்த சமுதாயத்திற்கு அர்ப்பணித்தார். தந்தை பெரியார் ஜாதி குறித்து அன்றே வழங்கிய திருத்த கருத்துகள் இன்றும் சமுதாயத்தில் பற்பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் பெரியார் பாதையில் மதம் என்னும் தலைப்பில் கழக மாவட்ட செயலாளர் எழிலேந்தியும், பெரியார் பார்வையில் கடவுள் எனும் தலைப்பில் கழக பொதுக்குழு உறுப்பினர் தாமோதரன் ஆகியோரும் சிறப்புரையாற்றினார்கள். இந்த நிகழ்ச்சியில் திராவிட, கழக பிரமுகர்கள் தண்டபாணி மணிவேல், பஞ்சமூர்த்தி, தர்மலிங்கம், வேலூ, பெரியார்செல்வம் உதயசங்கர், மாணிக்கவேல், செல்வராஜ், ராவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நூலக கண்ணன் நன்றி உரையாற்றினார்.
திருமங்கலம்
தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில், பெரியார் பட பேரணி திருமங்கலம் பேருந்து நிலையம் முதல் பெரியார் சிலை வரை நடைபெற்றது,பேரணியின் முடிவில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு, இனிப்பு வழங்கப்பட்டது, அதனை தொடர்ந்து பெரியார் நாகம்மை நகரில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு, உசிலை கழக மாவட்ட செயலாளர் தலைமையில் சென்று மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் மதுரை கன்னியாகுமரி தேசிய நான்கு வழிச்சாலையில் உள்ள சமத்துவபுரம் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது,திராவிடர் கழக இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் த. ம. எரிமலை, மாவட்ட செயலாளர் பா.முத்துக்கருப்பன், பகுத்தறிவாளர் கழகம் மொ. தங்கதுரை, மாவட்ட கழக அமைப்பாளர் ரோ. கணேசன், மாவட்ட கழக காப்பாளர் சி. பாண்டியன், திருமங்கலம் நகர தலைவர் மு.சண்முகசந்தரம், மாவட்ட இளைஞரணி தலைவர் ஏ.பி.சாமிநாதன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பா.பாஸ்கரன், மாவட்ட மாணவர் கழக தலைவர் பா.சதீஷ்குமார், மாவட்ட மாணவர் கழக செயலாளர் ம. ரஞ்சித்குமார் ஆகியோரும் தோழமை கட்சி பொருப்பாளர்களும், தோழர்களும், ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு பேரணியாகச் சென்று சிறப்பித்தனர்.