டெக்கான் கிரானிக்கல், சென்னை:
👉 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடும் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக ஏ.ஆர்.ரகுமானின் 30 நிமிட இசை ஒளிபரப்பப்பட உள்ளது. அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்க ஆசிய மக்களின் வாக்குகளைப் பெற இந்த ஏற்பாடு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
👉 பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸை ‘சத்தா ஜிஹாத்’ என்று விமர்சித்த உத்தவ் தாக்கரே, அவர்களுக்கு எப்போதும் அதிகாரத்தை அடைய வேண்டும் என்பதே நோக்கம் என சாடல்.
👉 நகர்ப்புற நக்சல்களின் தாக்கம் காங்கிரஸ் கட்சியில் உள்ளது என பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை விமர்சித்ததற்கு பாஜக பயங்கரவாதிகளின் கட்சி என மல்லிகார்ஜூனா கார்கே பதிலடி.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
👉 வானரங்கள் தப்பியோட்டம்; ஹரித்வார் சிறையில் நடைபெற்ற ராம் லீலா நிகழ்ச்சியின் போது வானரங்கள் வேடம் போட்ட கொலைக் குற்றவாளி உட்பட இரு கைதிகள் தப்பியோடினர்
👉 பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ஜே.டி.(யு.,) சார்பில், ‘பீம் சன்சாத்’ நிகழ்ச்சியை, நவம்பர், 26இல் நடத்த திட்டம். தாழ்த்தப்பட்டோர் வாக்காளர்களை கட்சிக்கு ஈர்க்கும் நோக்கத்துடன், இந்த ஏற்பாடு.
தி ஹிந்து:
👉 உலகெங்கிலும் உள்ள இந்து சமூகம் வங்கதேசத்திடம் இருந்து பாடம் கற்க வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், தசரா உரைக்கு, பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும்தான் இந்திய சமூகத்தில் வகுப்புவாத மற்றும் ஜாதி அடிப்படையிலான பிளவுகளை தூண்டிவிடுகின்றன என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
👉 மதுரை காமராஜர் பல்கலை, சென்னை பல்கலை, பாரதியார் பல்கலை உட்பட, அரசு கலை மற்றும் அறிவியல் பல்கலைகளுக்கு, துணைவேந்தர்களை (விசி) உடனடியாக நியமிக்க வேண்டும் என, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்கம், மாநில உயர்கல்வித்துறைக்கு வலியுறுத்தியுள்ளது.
👉 தமிழ்நாட்டில் கவரப்பேட்டையில் நடந்த ரயில் விபத்தைத் தொடர்ந்து ‘இன்னும் எத்தனை குடும்பங்கள் பாதிக்கப்பட வேண்டும்?’: ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
தி டெலிகிராப்:
👉 தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள், நல்ல மதிப்பெண்கள் மூலம் பொதுப் பிரிவுக்கு தகுதி பெற்று, பொது பிரிவின் கீழ் சேர்க்கை பெறும்போது கட்டண விலக்கு தராமல் முழு கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன என அம்பேத்கர் அமைப்புகள் குற்றச்சாட்டு.
– குடந்தை கருணா