பெங்களூரு, அக்.13 பா.ஜ.க. பயங்கரவாதிகளின் கட்சி என்று கார்கே, பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
நகர்ப்புற நக்சல்களின் தாக்கம் காங்கிரஸ் கட்சியில் உள்ளது என்று பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை விமர்சித்து வருகிறார்.
இதற்குக் கருநாடக மாநிலம் கலபுர்கியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மோடியின் விமர்சனத்துக்குப் பதிலடி கொடுத்து பேசியுள்ளார். அவர் கூறும்போது,’ மோடி எப்போதும் காங்கிரஸ் கட்சியை நகர்ப்புற நக்சல் கட்சி என்று விமர்சிக்கிறார். அது அவரது பழக்கம். ஆனால் அவரது கட்சி எப்பேர்ப்பட்டது? பா.ஜ.க. பயங்கரவாதிகளின் கட்சி; கொலைகளில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி மீது குற்றம்சாட்ட மோடிக்கு உரிமையே கிடையாது’ என்று விமர்சித்திருந்தார்.
பா.ஜ.க.வை பயங்கரவாதிகளின் கட்சி என்று கார்கே விமர்சித்திருப்பது பா.ஜ.க.வினர் மத்தியில் கடும் கொந்த ளிப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.