லக்னோ, அக்.12 உத்தரப் பிரதேசத்தில் சுதந்திர போராட்ட வீரர் ஜெயபிரகாஷ் நாராயணின் பிறந்த நாளையொட்டி, லக்னோ வில் உள்ள அவர் பெயரிலான அருங்காட்சியகத்துக்கு சென்று மேனாள் முதலமைச்சரும், சமாஜ் வாதி தலைவருமான அகிலேஷ் மரியாதை செலுத்தவிருந்த நிலை யில், காவல்துறையினர் அனுமதி மறுத்து அவரது வீட்டு முன் தடுப் புகளை அமைத்தனர்.
உ.பி.,யில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மேனாள் முதலமைச்சர் அகிலேஷின் சமாஜ்வாதி, பிரதான எதிர்க்கட்சியாக விளங்குகிறது.
சோஷலிசவாதியும், சுதந்திர போராட்ட வீரருமான ஜெயபிர காஷ் நாராயண் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதை யொட்டி, லக்னோவில் ஜெய பிரகாஷ் நாராயண் பன்னாட்டு மய்யத்தில் உள்ள அருங்காட்சிய கத்துக்கு, அகிலேஷ் முந்தைய நாள் இரவு சென்றார். அப் போது, அதன் நுழைவாயில் இரும்பு தடுப்புகளை வைத்து அடைக்கப் பட்டிருந்தது. இதனால், உள்ளே செல்ல முடியாமல் தவித்த அகி லேஷ் மாநில பா.ஜ., அரசு சுதந் திர போராட்ட வீரர்களை அவம திப்பதாக குற்றஞ்சாட்டினார்.
அருங்காட்சியகத்தில் கட்டு மானப் பொருட்கள் திட்டமிடப் படாத முறையில் வைக்கப்பட்டு உள்ளதால், அங்கு வருகை தருவது ஆபத்தானது; பாதுகாப்பற்றது’ என, லக்னோ மேம்பாட்டு ஆணையம், அகிலேஷ் யாதவுக்கு கடிதம் எழுதியிருந்தது. இந்நிலையில், ஜெயபிரகாஷ் நாராயணின் பிறந்த நாளில், அவரது அருங் காட்சியகத்துக்கு அகிலேஷ் சென்று விடக்கூடும் என்பதால், லக்னோவின் விக்ரமாதித்யா மார்க்கில் உள்ள அவரது வீட்டின் முன், காவல்துறையினர், அதிரடிப்படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டனர். மேலும் வீட்டை சுற்றி தடுப்புகளை அமைத்தனர். இதையறிந்த நுாற்றுக்கணக்கான சமாஜ்வாதி தொண்டர்கள், அகிலேஷ் வீட்டின் முன் குவிந்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. காவல்துறையினர், லக்னோ நிர்வாகம் அனுமதி மறுத்ததை அடுத்து, வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயபிரகாஷ் நாராயணின் மார்பளவு சிலைக்கு, அகிலேஷ் யாதவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதன்பின், அகிலேஷ் யாதவ் பேசியதாவது: அனைத்து நல்ல காரியங்களை யும் பா.ஜ., தடுத்து நிறுத்துகிறது. அருங்காட்சியகத்தை விற்பனை செய்ய பா.ஜ., அரசு துடிக்கிறது. சுதந்திரப் போராட்ட வீரர்களை பா.ஜ., தொடர்ந்து அவமதிக்கிறது. நான் வெளியே செல்லாதபடி வீட்டை சுற்றி தடுப்புகள் அமைத் துள்ளனர். இந்த தடுப்புகள் எல்லாம் எங்களை ஒன்றும் செய்யாது.
ஜெயபிரகாஷ் நாராயணுக்கு மரியாதை செலுத்துவதை பா.ஜ., தடுத்து நிறுத்தியுள்ளது. அவரது இயக்கத்தில் இருந்தே அரசியல் பயணத்தை அய்க்கிய ஜனதா தள தலைவரும், பீகார் முதலமைச்சருமான நிதீஷ்குமார் துவக்கினார். தற்போது அவருக்கே பா.ஜ., அவமரியாதை செய்துள்ளது. பா.ஜ.,வுக்கான ஆதரவை அவர் திரும்பப் பெற வேண்டும். என்று அகிலேஷ் கூறியுள்ளார்.