திருச்சி, அக். 12- திருச்சி விமான நிலையத்தி லிருந்து ஷார்ஜாவுக்கு 140 பயணிகளுடன் நேற்று (11.10.2024) மாலை 5.30 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 613 விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
திருச்சி விமான நிலையத்தி லிருந்து கிளம்பிய சில நிமிடங் களிலேயே, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் ஹைட்ராலிக் அமைப்புகளில் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக, விமானத்தை தரை யிறக்கும் கியர் அமைப்புகளில் பிரச்சினை ஏற்பட்டது.
இதையடுத்து, அந்த விமானம் சுமார் 4,000 அடி உயரத்தில் 2 மணி நேரம் வானில் வட்ட மடித்தபடி பறந்து வந்தது குறிப் பிடத்தக்கது.
இந்த நிலையில், விமானம் உடனடியாக தரையிறக்கப் படாதது ஏன்? என்பதை ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அவர் கூறியதாவது, “ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அவசரமாக தரையிறக்கப் படவில்லை.
விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட் டுள்ளது கண்டறியப் பட்டதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வானில் வரையறுக்கப்பட்ட பரப்பில் விமானம் பல தடவை வட்ட மடித்து வந்தது.
இதன்மூலம், விமானத்தி லிருந்த எரிபொருள் சீக்கிரமாக காலியாவதுடன் விமானத்தின் எடையும் வெகுவாக குறை யும்.
இதன் காரணமாக, ஓடு தளத்தில் விமானத்தை சுலபமாக தரையிறக்க முடியும்.
தொழில்நுட்பக் கோளாறு ஏன் ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. பயணிகளுக்காக மாற்று விமா னமும் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.
இந்த எதிர்பாராத நிகழ்வுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், பயணிகளின் பாதுகாப்பே முக்கியம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
விமானிகளுக்கும் விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக் கும் இடையே துரிதமான தகவல் பரிமாற்றம் மற்றும் அதற்கேற்ப உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளீதர் மோஹோல் தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியா விமானத்தில், விமானிகள், விமானப் பணி யாளர்கள் உள்பட மொத்தம் 150 பேர் பயணித்த நிலையில், அவர்கள் அனைவரும் காய மின்றி பத்திரமாக வெளியேறி யுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக திருச்சி விமான நிலை யத்தில் 15க்கும் மேற்பட்ட ஆம்பு லன்ஸ்கள் தயார் நிலையில் வரவழைக் கப்பட்டிருந்தன.
மேலும், தீயணைப்பு வாக னங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன. அசாம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் இருக்க அதிகளவில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியதற்கு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!
சென்னை, அக்.12- விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கிய விமானிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதை அறிந்து நிம்மதி அடைந்தேன்.
தரையிறங்குவதில் சிக்கல் என்ற தகவல் கிடைத்ததும், அலுவலர்களுடன் உடனடியாக தொலைபேசி வாயிலாக அவசரக் கூட்டத்தைக் கூட்டி, தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், மருத்துவ உதவிகள் எனத் தேவையான அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தயார்நிலையில் வைத்திட அறுவுறுத்தி இருந்தேன்.
பயணிகள் அனைவரும் தொடர்ந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யவும், அவர்களுக்கு மேற்கொண்டு தேவைப்படும் உதவிகளை வழங்கவும் மாவட்ட ஆட்சியரிடம் தற்போது கூறியுள்ளேன்.
பாதுகாப்பாக விமானத்தைத் தரையிறக்கிய விமானி மற்றும் விமானக் குழுவினருக்கும் எனது பாராட்டுகள்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்