மூத்த இதழாளரும், கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியின் ஆசிரியரும், திராவிடர் இயக்க ஆய்வாளருமான ப.திருமாவேலன் அவர்களின் தாயாரும், பெரும்புலவர் திரு. படிக்கராமு அவர்களின் வாழ்விணையருமான திருமதி. முத்துலக்குமி (82) அவர்கள் மறைவுற்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.
சான்றோனாக்கிய தாயாக வாழ்ந்து மறைந்துள்ள அம்மையாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், அய்யா படிக்கராமு, எழுத்தாளர் ப.திருமாவேலன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தலைவர்,
திராவிடர் கழகம்