கான்பூா் அய்.அய்.டி.யில் மாணவி தூக்கிட்டு தற்கொலை ஓராண்டில் 4-ஆவது நிகழ்வு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கான்பூர்,அக்.11 உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூா் அய்அய்டி-யில் முனைவா் பட்டப்படிப்பு மேற்கொண்டுவந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதே கல்லூரியில் கடந்த ஓராண்டில் நிகழும் நான்காவது தற்கொலை நிகழ்வு இதுவாகும்.
கான்பூரில் உள்ள சனிகவான் பகுதியைச் சோ்ந்த பிரகதி கா்யா (28), அய்அய்டி கான்பூரில் புவி அறிவியலில் முனைவா் பட்டம் பயின்று வருகிறார். இந்நிலையில், அவா் தனது விடுதி அறையில் 9.10.2024 அன்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சக மாணவா்கள் அளித்த தகவலின் பேரில் கல்லூரி நிர்வாகத்தினா் காவல் துறையிடம் தெரிவித்தனா். விரைந்து வந்த காவலா்கள் விடுதி அறையின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனா்.

அப்போது, தூக்கிட்ட நிலையில் பிரகதியின் உடல் காணப்பட்டது.
தனது இந்த முடிவுக்கு யாரும் காரணமில்லை என்று பிரகதி எழுதிய தற்கொலை கடிதம் அறையில் இருந்து எடுக்கப்பட்டது. முதல் கட்ட விசாரணைக்குப் பிறகே தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என துணை காவல் ஆணையா் அபிஷேக் பாண்டே தெரிவித்தார். அய்.அய்.டி. கான்பூரில் கடந்த ஓராண்டில் நிகழும் நான்காவது தற்கொலை நிகழ்வு இதுவாகும். முன்னதாக, கடந்த ஜனவரி 18 மற்றும் 11-ஆம் தேதிகளில் பிரியங்கா ஜெய்ஸ்வால் மற்றும் விகாஸ் குமார் மீனா ஆகியோர் தங்களது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனா். கடந்தாண்டு டிசம்பா் மாதம் பல்லவி என்கிற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கல்லூரி மாணவா்களுக்கு வாக்குரிமை விழிப்புணா்வு
யுஜிசி அறிவுறுத்தல்
புதுடில்லி, அக்.11 பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் பயிலும் மாணவா்களிடம் தோ்தல் நடை முறைகள், வாக்குரிமை குறித்து விழிப் புணா்வு ஏற்படுத்துவதற்கான செயல் திட்டங்களை வகுக்க வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
யுஜிசி செயலா் மணீஷ் ஆா்.ஜோஷி உயா்கல்வி நிறுவனங்க ளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மாணவா்களிடம் வாக்குரிமை குறித்த கல்வி அறிவை மேம்படுத் துவது தொடா்பாக இந்திய தோ்தல் ஆணையம்- ஒன்றிய கல்வி அமைச்சகம் இடையே கடந்த ஆண்டு புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தோ்தல் நடைமுறைகள், வாக்குரிமை பெறுவதன் அவசியம் தொடா்பான பாடத்திட்டங்களைச் சோ்க்க வேண்டும். மேலும் இது தொடா்பான விவாதங்கள், போட்டிகள், பயிலரங்குகள் போன்றவற்றை அவ்வப்போது நடத்தி அனைத்து மாணவா்களும் வாக்குரிமை குறித்த கல்வியறிவை முழுமையாக பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *