மும்பை, அக்.10 தொழிலதிபர் ரத்தன் டாடா (86) மும்பை மருத்துவமனையில் நேற்று (9.10.2024) காலமானார். முதுமை தொடர்பான பல்வேறு பாதிப்புகள் காரணமாக மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் கடந்த 7.10.2024 அன்று அவர் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை சீராக இல்லை என்று தகவல்கள் பரவிய நிலையில், நேற்று (9.10.2024) இரவு அவர் காலமானதாக டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் உறுதி செய்தார்.