பெங்களூரு, அக்.10- கருநாடக முதலமைச்சர் சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
கருநாடகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு கடந்த 2018ஆம் ஆண்டு நிறைவடைந்தது. புள்ளி விவரங்களை இணைக்கும் பணிகள் நிறைவடையாததால் அதன் அறிக்கை அரசுக்கு கிடைக்க வில்லை.
இதை தவிர வேறு எந்த காரணமும் இல்லை. இப்போது அந்த அறிக்கையை வெளியிட தயாராகியுள்ளோம். இதை அங்கீகரிக்க எங்கள் அரசும் தயாராக உள்ளது.
எங்கள் கட்சியை சேர்ந்த அனைத்து தலைவர்களும் இந்த கணக்கெடுப்பு அறிக்கையை ஒப்புக் கொண்டுள்ளனர்.
யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எதிர்க் கட்சிகளின் தவறான பிரசாரத்தால் சிலரின் மனதில் எதிர்மறையான கருத்துகள் ஏற்பட்டன. சிலருக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை போக்கி இந்த கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்த விரைவில் நடவ டிக்கை எடுக்கப்படும்.
நாங்கள் இந்த அறிக்கையை அமல்படுத்த திடீரென தயாராக வில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த நாள் முதல் இதுகுறித்து விவாதித்து வருகிறோம்.
உரிய விவாதம் நடத்தாமல் முடிவு எடுக்க நாங்கள் ஒன்றும் சர்வாதிகார ஆட்சியை நடத்தவில்லை. இட ஒதுக் கீட்டில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிலைப்பாடு என்ன என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
– இவ்வாறு அவர் கூறியுள்ளார்.