ஈரோடு, அக்.10- ஈரோட்டில் 8.10.2024 பெரியார் படிப்பக வாசகர் கூட்டம், ஈரோடு பெரியார் மன் றத்தில் நடைபெற்றது. மூத்த ஊட கவியலாளர் தமிழ்க் கேள்வி செந்தில் வேல் – “ஏன்? விழ வேண்டும் பாசிசம்… எதற்கு வளர வேண்டும் திராவிடம்” என்ற தலைப்பில் சிறப் புரையாற்றினார்.
அவரது உரையில் “தந்தை பெரியார் அவர்கள் அனைத்து ஜாதியினரும் இந்து மதத்தில் உள்ளவர்கள் அர்ச்சகராகலாம் என்று போராட்டம் நடத்தினார். அதனை முத்தமிழர் கலைஞர் முதலமைச்சராக வந்த உடன் சட்ட மாக நிறைவேற்றினார். தற்போது உள்ள முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் அந்த சட்டத்தை நிறைவேற்றி அனைத்து ஜாதியினரையும் நியமித்தார்.
பெண்களை ஓதுவாளர்களாக நியமித்தார். இவர்கள் எல்லாம் இந்து மத எதிரிகளாம் – விரோதிகளாம்.ஆனால், கோயிலுக்குள் உள்ளே நுழையக்கூடாது, நீ சூத்திரன் உள்ளே வரக்கூடாது என்று காலங்காலமாக தமிழர்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் பார்த்துக் கொண்ட பார்ப் பனர்களும் இந்துத்துவவாதிகளும், இந்து மத காப்பாளர்களாம்.
திராவிடம் மனிதநேயத்தை மனித வளத்தையும் வளர்க்கிறது – பார்ப்பன இந்துத்துவா மனிதர் களைப் பிரிக்கிறது. எனவே, இந்துத் துவா என்ற பாசிசம் ஒழிக்கப்பட வேண்டும் திராவிடம் வளர வேண்டும் என்றும், இன்றைய தினம் தமிழ்நாடு கல்வி சுகாதாரம் வேலைவாய்ப்பில் சிறப்பான முறையில் வளர்ந்தோங்கி நிற் கிறது. காரணம் திராவிடம் என்ற மனித நேயக் கொள்கை வடநாட்டில் நூறாண்டுகளுக்கு முன்பு வளராத மாநிலமாக இருந்தது.
தற்போதும் அதே நிலையில் தான் இருந்துகொண்டிருக்கின்றது. அதற்கு இந்துத்துவா என்ற மதவெறிதான் காரணம். திராவிடம் வளர்ந்தால் மனிதநேயம் வளரும் இந்துத்துவ வளர்ந்தால் மனிதநேயத்துக்கு மனிதத் துக்கு அச்சுறுத்தல் ஏற்படும். எனவே, “இந்துத்வா பாசிசம் ஒழிக்கப்பட வேண்டும் – திராவிடம் வளர வேண்டும்” என்று தனது உரையில் குறிப்பிட்டார். இந்தக் கூட்டத்திற்கு தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு சண்முகம், மாவட்ட தலைவர் நற்குணன், மாநகரத் தலைவர்
கோ.திருநாவுக்கரசு, மாநகர செய லாளர் தே.காமராஜ், ப.சத்தியமூர்த்தி, பி.என்.எம்.பெரியசாமி, கோபி மாவட்ட காப்பாளர் சிவலிங்கம், நாமக்கல் மாவட்ட தலைவர்
ஆ.குமார், சரவணன், பவானி அசோக் குமார், திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக மாவட்ட துணைச் செயலாளர் அ.செந்தில் குமார், பகுதி கழக தி.மு.க மண்டல செயலாளர்கள் அக்னிச் சந்துரு, வீ.சி.நடராஜன், கோட்டை ராமு (எ) ராமச்சந்திரன், சந்திரசேகரன் கவுன்சிலர் செகதீசன் மற்றும் ஏராளமான பெண்கள் பொதுமக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரையை கவனமாகக் கேட்டனர்.
இறுதியாக பெரியார் படிப்பக வாசகர் வட்ட பொருளாளர் ஆனந்தலட்சுமி நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவடைந்தது. வந்திருந்த விருந்தினர் அனைவருக்கும் சிறப்புப் பரிசாக தந்தை பெரியார் படம் பொறித்த நினைவுச் சின்னம், பெரியார் புத்தகம் வழங்கப்பட்டது.