குடியேற்றம், அக்.10- வேலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் வேலூர் மாவட்ட மகளிரணி தலைவர் எழுத்தாளர் குடியேற்றம் ந.தேன்மொழி எழுதிய தவிப்பு நூல் திறனாய்வு 06.10.2024 அன்று மாலை 6 மணியளவில் குடியேற்றம் புவனேசுவரிப் பேட்டை பெரியார் அரங்கில் நடைபெற்றது.
வேலூர் மாவட்ட கழக தலைவர் வி.இ.சிவகுமார் நிகழ்ச்சிக்கு தலைமை யேற்றார். வேலூர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ச.இரம்யா அனை வரையும் வரவேற்றார், நகர மகளிர் பாசறை தலைவர் இரா.ராஜகுமாரி
இந்நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
வேலூர் மாவட்ட காப்பாளர் ச.ஈஸ்வரி, நகர கழக தலைவர் சி.சாந்த குமார், மாவட்ட மகளிரணி செயலாளர் லதா சிவகுமார் ,வேலூர் மாவட்ட பகுத் தறிவாளர் கழக செயலாளர் முனைவர் வே.வினாயகமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் பி.தனபால், மாவட்ட துணைத் தலைவர் க.சையத் அலீம், நகர ப.க தலைவர் ப.ஜீவானந்தம், க.பரமசிவம், வேலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் பொ.தயாளன், மாவட்ட இளைஞரணி செயலாளர் இ.தமிழ்தாரணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பகுத்தறிவாளர் கழக மாநில அமைப் பாளர் இர.அன்பரசன் உரையாற்றினார். வேலூர் மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் வி.சடகோபன், கவிஞர் முல்லைவாசன், நகர மன்ற உறுப்பினர் த.புவியரசி, இன்னர்வீல் சங்கம் வசந்தி லட்சுமிபதி ஆகியோர் தவிப்பு நூல் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கவி தைகள் குறித்து பேசி வாழ்த்துரை வழங் கினார்கள்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட குடியேற்றம் நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி ஆற்றிய உரையில் எழுத்தாளர் ந.தேன்மொழி எழுதிய தவிப்பு நூல் பெண்கள் பல காலங்களாக அனுபவித்து வரும் சில இன்னல்களை உணர்ச்சி பூர்வமாக தன்னுடைய எழுத்துகள் மூலம் வெளிப்படுத்தி உள்ளார்.
இவர் குடியேற்றம் நகரின் பெண் எழுத்தாளர் என்பது குடியேற்றம் மக்கள் அனை வருக்கும் குறிப்பாக பெண்களுக்கு பெருமை தரக்கூடியதாகும். என்று சிறப்பு ரையில் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வின் சிறப்பம்சமாக கலைஞர் ஆராய்ச்சி மருத்துவமனை, வேலூர் கண் மருத்துவமனை இயக்குநர், மருத்துவர் தி.அ.முகமது சயி ஆற்றிய திற னாய்வு உரையில் குறிப்பிட்டதாவது, எழுத்தாளர் ந.தேன்மொழி எழுதிய இந்த கவிதை நூலை நான் பிரமிப்பாக பார்க்கிறேன். எங்கோ சவுத் ஆப்பிரிக்காவில் இருக்கக்கூடிய எழுத்தாளர் ஒருவரின் எழுத்து, தென் அமெரிக்காவில் இருக்கக்கூடிய ஒரு எழுத்தாளர் எழுதக்கூடிய அடக்கு முறை கட்டுரை, பாரசீகத்தில் இருக் கக்கூடிய ஒரு பெண்மணியின் ஒடுக்குமுறையின் தொகுப்புகள். 2000 ஆண்டுகளாக உலகெங்கும் வாழும் பெண்களின் அவல நிலைகளை பல நூல்கள் மூலம் நாம் படித்திருக்கிறோம்.
இப்பொழுது மீண்டும் ஒரு பெண்மணி பெண்களின் அவல நிலைகளையும் தவிப்புகளையும் எழுதுகிறார் என்றால் 2000 ஆண்டுகளாக மனிதன் மாறவில்லை, திருந்தவும் இல்லை என்பதே இந்த தவிப்பு நூல் காட்டுகிறது.
தந்தை பெரியார் அவர்களின் எழுத்துகள் தமிழர்களுக்கும் திராவிடர் களுக்கும் மட்டும் சொந்தமானது அல்ல. உலகில் உள்ள மனிதர்கள் அனைவருக்கும் பொதுவானது. எங்கெல்லாம் மனி தர்கள் ஒடுக்கப்படுகிறார்களோ அங்கு பெரியாரின் எழுத்துகளும் சிந்தனை களும் தேவைப்படுகிறது. அது போல் இந்த தவிப்பு நூல் உலகில் உள்ள அத்தனை பெண்களின் தவிப்புகளை வெளிப்படுத்தக்கூடிய கவிதை புத்தகம்.
ஆகவே பெண்கள் அனைவரும் இந்த நூலை கொண்டாட வேண்டும். என்று தமது திறனாய்வு உரையில் குறிப்பிட்டு பேசினார்.
புத்தகத் திறனாய்வின் இறுதி நிகழ்வாக நூலாசிரியர் ந.தேன்மொழி ஆற்றிய ஏற்புரையில் பேசியதாவது:
தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு சிந்தனைகள் சுயமரியாதை முழுக்கங்கள் மற்றும் அய்யாவின் எழுத்துகள் ஆகியவற்றை நான் அறிந்து கொள்ளவும் அந்தக் கருத்துகளை உள்வாங்கிக் கொள்ளவும் ஊக்கப்படுத்தி யவர்கள் திராவிட இயக்கத் தோழர்கள் அவர்களுக்கு இந்த நேரத்தில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது ஏற்புரையில் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் திராவிடர் கழக தோழர்கள், பகுத்தறிவாளர் கழக தோழர்கள், மகளிர் அணி, மகளிர் பாசறை, இளைஞர் அணி தொழர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தோழர்களும், எழுத்தாளர்கள், மற்றும் கவிஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இறுதியாக மாவட்ட இளைஞரணி செயலாளர் இ.தமிழ் தரணி நன்றி உரை ஆற்றினார்.
பகுத்தறிவாளர் கழக தோழர்கள் பிள்ளைகள் சிலம்பம் பிரிவில் “நோபல் உலக சாதனை”
குடியேற்றம்: 02.10.2024 அன்று வேலூரில் 6000 மாணவர்களை ஒருங் கிணைத்து சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய கலைகளை பெருமைப் படுத்தும் விதத்தில் நடைபெற்ற “நோபல் உலக சாதனை” நிகழ்வில் சிலம்பம் பிரிவில் பங்கேற்று சாதனை படைத்த வேலூர் மாவட்ட பகுதறிவாளர் கழக செயலாளர் வே.வினாயகமூர்த்தியின் மகன் மாணவர் வே.வி.யோகசரண், வேலூர் மாவட்ட பகுதறிவாளர் கழக துணைத் தலைவர் க.சையத் அலீமின் பிள்ளைகள் மாணவன் அ.அயான் கபீர், மாணவி அ.இஃப்பா சனம் மற்றும் சிலம்பு ஆசிரியர் மாஸ்டர் ப.பொன்னரசு ஆகியோரை பாராட்டி வேலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.