பெரம்பூர் பேருந்து நிலையத்தின் பக்கவாட்டுப் பகுதியில் தொடங்கும் பாரதி சாலையில் பேருந்து நிலையத்தின் சுற்றுச்சுவரை ஒட்டி ஆக்கிரமிப்பு செய்து ஒரு பிள்ளையார் கோயில் கட்டப்பட்டுள்ளது. அதைவிடக் கொடுமை கோயில் சுவரில் அடிக்க வேண்டிய காவி நிற பட்டைக் கோடுகளை, பேருந்து நிலையத்தின் சுற்றுச்சுவர் முழுவதும் அடித்துள்ளனர். இவ்வளவையும் செய்துவிட்டு, ஆலய நிர்மாணம் ஸ்தபதி திரு ஆர்.ரமேஷ்பாபு, கொளத்தூர், 98401 33146 என்று முகவரி மற்றும் தொடர்பு எண்ணையும் சுற்றுச்சுவரில் துணிச்சலுடன் எழுதி வைக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு செய்து கோயில் கட்டியதே பெரும் குற்றம். இதில் பொது இடமான பேருந்து நிலையத்தின் சுற்றுச்சுவரை கோயில் சுற்றுச்சுவராகக் கருதும்படி காவி வண்ணம் அடிக்கப்பட்டுள்ளதே. கேள்வி கேட்பார் இல்லையா?