டேராடூன், அக்.9- உத்தராகண்ட் மாநிலம் பங்கேஸ்வர் மாவட்டத்தில் சுந்தர் துங்கா பனிப்பாறை உள்ளது. இங்குயுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற நந்தாதேவி அணைக்கட்டு இருக்கிறது. இதன் அருகே உள்ள மலையில் 14 ஆயிரத்து 500 அடி உயரத்தில் உள்ள இந்த இடத்தில் சாமியார் ஒருவர், சட்டவிரோதமாக சிறிய கட்டடம் கட்டி உள்ளார். அவரிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், அந்த கட்டடத்தை அதிகாரிகள் இடித்து அகற்றினர். அங்குள்ள குளத்தை அந்த சாமியார் நீச்சல் குளமாக மாற்றி பயன்படுத்தி வந்ததாகவும் புகார் கூறப்பட்டது. அதற்காகவும் அதிகாரிகள் சாமியாரை எச்சரித்தனர்.