மணிப்பூர் முதலமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்

Viduthalai
1 Min Read

 மணிப்பூரில் நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவ ரூ.10 கோடி மதிப்புள்ள அத்தியாவசியப் பொருள்கள்மணிப்பூர் முதலமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்

சென்னை, ஆக. 2- மணிப்பூரில் வன் முறையால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடும் பொருட்டு ரூ.10 கோடி மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைத்திட ஒப்புதல் வழங்கக் கோரி மணிப்பூர் முதல மைச்சர் பிரேன் சிங்குக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், “மணிப்பூரில் உள்ள தமிழர்களுக்கு அளித்து வரும் ஆதர வுக்கு நன்றி. தமிழர்களின் உயிருக்கும் உடமைக்கும் தொடர்ந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

தற்போதைய சூழ்நிலையின் காரண மாக 50,000-க்கும் மேற் பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள தாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில அத்தியாவசிய பொருட் களின் தேவை அதிகரித்து வருவதாகவும் எனது கவனத்துக்கு வந்துள்ளது.

இந்த இக்கட்டான நேரத்தில், சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான தார்பாலின் விரிப்புகள், படுக்கை விரிப் புகள், கொசுவலைகள், அத்தியாவசிய மருந்துகள், சானிட்டரி நாப்கின்கள் மற்றும் பால் பவுடர் போன்ற தேவையான நிவாரணப் பொருட்களை வழங் குவதன் மூலம் மணிப்பூர் மாநிலத்துக்கு உதவிகளை வழங்கிடத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது.

இந்த பொருட் கள் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தேவைப் பட்டால் அவற்றை விமானம் மூலம் அனுப்பி வைத்திட நடவடிக்கை மேற்கொள் ளப்படும்.

இந்த மனிதாபிமான உதவிக்கு மணிப்பூர் மாநில அரசின் ஒப்புதலை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இது தொடர்பாக எடுக்கப்படவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தெரியப்படுத்த வேண்டும்.

இதன்மூலம் தமிழ்நாடு அரசின் அதிகாரிகள் மணிப்பூர் மாநில அதிகாரி களுடன் ஒருங்கி ணைந்து பணிகளை மேற்கொண்டு நிவாரணப் பொருட் களை விரைவாக அனுப்ப இயலும்” என்று மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்கிடம் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *