சென்னை, அக்.8- பெரியார் மருத்துவக் குழும இயக்குநர் மருத்துவர் இரா.கவுதமன் பவள விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா திராவிடர் கழகம் சார்பில் 6.10.2024 அன்று காலை 10 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் நடைபெற்றது.
திராவிடர் கழகம் சார்பில் ஆண்டுதோறும் குற்றாலத்தில் நடைபெறுகின்ற பெரியாரியல் பயிற்சி வகுப்பு 45 ஆண்டு காலம் நடைபெறக் காரணமானவர் மருத்துவர் இரா.கவுதமன். கழக மாநாடுகள், பேரணிகளில் பெரியார் தொண்டராக கொள்கை முழக்கமிட்டுவருபவர். பெரியார் மருத்துவக் குழுமத்தின் இயக்கு நராக பொறுப்பேற்று மருத்துவ முகாம்களை கிராமங்களில் அமைத்து முகாமை ஒருங் கிணைத்து தொண்டாற்றி வருபவர். அவர் கொடையால் 30 மாணவர்கள் மருத்துவத் துறையில் உருவாக்கப்பட்டுள்ளனர். சிறந்த மருத்துவ வல்லுநர், உதகையில் தோட்டத் தொழிலாளர் குடும்பத்தினருக்கு பேருதவி செய்து வருபவர் என அடுக்கடுக்கான அவரது பண்புநலன்களைப்பற்றி உரையாற்றிய அனைவரும் எடுத்துக் கூறினார்கள்.
தாம்பரம் மாவட்ட கழக மகளிரணித் தலைவர் இறைவி வரவேற்றார்.
கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையுரை ஆற்றினார்.
மருத்துவர் இரா.கவுதமன் அவர்களின் பெயர்த்தியும் பெரியார் பிஞ்சுமான இன் னிசை அமுதன் ஜெர்மனி நாட்டில் முனிச் நகரிலிருந்து காணொலி வாயிலாக, தாத்தா மருத்துவர் கவுதமனுக்கு பவள விழா வாழ்த்து தெரிவித்தும், தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தும் உரையாற்றினார்.
பெரியார் மருத்துவக் குழும இயக்குநர் மருத்துவர் இரா.கவுதமன் எழுதிய ‘மரணம்’, ’மருத்துவமும் மூடநம்பிக்கைகளும்’, ‘பழைய வரலாறு! புதிய பாடம்!!’, ‘விதி நம்பிக்கையை விலக்கிய அதிநவீன மருத்துவங்கள்!’ ஆகிய நான்கு புத்தகங்களையும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டார். நான்கு புத்தகங்களின் விலை மதிப்பு ரூ.580. விழாவில் ரூ.500க்கு வழங்கப்பட்டது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிட மிருந்து கழகப் பொறுப்பாளர்கள், மருத்துவர்கள், மருத்துவத்துறையினர் உள்பட பலர் வரிசையில் சென்று உரிய தொகை வழங்கி புத்தகங்களைப் பெற்றுக்கொண்டனர்.
‘மரணம்’ புத்தகத்தை தமிழர் தலைவரிட மிருந்து மராட்டிய மாநிலம் மும்பையிலிருந்து வருகை தந்தவரான திராவிடவியல் மறுமலர்ச்சி மய்யத்தின் நிறுவனத் தலைவர் தலைமைப்பேராயர் முனைவர் ஜோ,இரவிக்குமார் ஸ்டீபன் பெற்றுக்கொண்டு கருத்துரையாற்றினார். மராட்டிய மண்ணின் சீர்திருத்தவாதி மகாத்மா ஜோதிபாபூலே அணிந்ததுபோன்ற தலைப்பாகையினை (டர்பன்) மராட்டிய மண்ணின் அடையாளமாக தமிழர் தலைவருக்கு அணிவித்து சிறப்பு செய்தார். திராவிட என்சைக்கிளோபீடியாவை மருத்துவர் கவுதமனிடம் வழங்கினார்.
‘மருத்துவமும் மூடநம்பிக்கைகளும்’ தலைப்பிலான புத்தகத்தை தமிழர் தலைவ ரிடமிருந்து பேராசிரியர் மருத்துவர் பிருதிவிராஜ் பெற்றுக்கொண்டு கருத்துரையாற்றினார்.
‘பழைய வரலாறு! புதிய பாடம்!!’ புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு பேராசிரியர் முனைவர் த.ஜானகி, ‘விதி நம்பிக்கையை விலக்கிய அதிநவீன மருத்துவங்கள்!’ புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் இரா.செந்தாமரை கருத்துரையாற்றினார்கள்.
மதிமுக கொள்கை விளக்க அணிச் செய லாளர் ஆ.வந்தியதேவன், பிரச்சாரச் செயலா ளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, கழகப் பொரு ளாளர் வீ.குமரேசன் வாழ்த்துரை ஆற்றினர்.
பவள விழா காணும் மருத்துவர் இரா.கவுதமன் அவர்களைப்பாராட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும், மோகனா அம்மையாரும் இணைந்து பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தனர்.
மருத்துவர் இரா.கவுதமன் ஏற்புரை ஆற்றினார்.
கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விழா சிறப்புரை ஆற்றினார்.
மருத்துவர் க.பி.இனியன் நன்றி கூறினார்.
கழகத் துணைப்பொதுச்செயலாளர் வழக் குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார்.
விழாவில் மாநில, மாவட்டக் கழகப் பொறுப் பாளர்கள், மூத்த மருத்துவர்கள் ச.ராஜசேகரன், சரோஜா பழனியப்பன், சரோஜினி ஏகாம்பரம், மீனாம்பாள் உள்ளிட்ட மருத்துவர்கள், மருத் துவத்துறை வல்லுநர்கள் உள்பட அறிஞர் பெரு மக்கள் ஏராளமான அளவில் பங்கேற்றனர்.