தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை (17.9.2024) தமிழ்நாடெங்கும் கழகத் தோழர்கள் எழுச்சியுடன் கொண்டாடினர். அதன் விவரம் வருமாறு:
ராணிப்பேட்டை
17.9.2024 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 146ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இராணிப்பேட்டை மாவட்டம் வாலாசாப்பேட்டை ஒன்றிய அலுவலகத்தில் உள்ள தந்தை பெரியார் சிலை மற்றும் அம்மூர் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலை மற்றும் பெரிய தகரகுப்பத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் படத்திற்கு மாலை அணிவித்து பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பெரிய தகரகுப்பம் ந.இராமு இல்லம் முன்பாக தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் – பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் ந.இராமு, திராவிட முன்னேற்றக் கழக இராணிப்பேட்டை மாவட்ட துணைச் செயலாளர் துரைமஸ்தான் முன்னிலையில் தந்தை பெரியாரின் பெருந்தொண்டர் சி.இராமலிங்கம், சி.நாகராஜ், சி.அருணாச்சலம், தகரகுப்பம் ஊராட்சி மன்ற உறுப்பினர் சேகர், வாலாசா விஜயகுமார் – திமுக, செங்காடு மோட்டூர் திமுக மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆஞ்சி, வாலாசா உதயநிதி மன்றத்தின் ஒன்றிய செயலாளர் இரா.தமிழ்வாணன், ஏ.கபில்தேவ், ஜெயசீலன், பா.நவீன்குமார், சுரேஷ்குமார் மணிகண்டன், சத்தியமூர்த்தி, அ.ஜெய தாசன், கோ.இளந்தமிழன் மற்றும் பலர் கலந்து கொண்டு தந்தை பெரியார் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்று இனிப்பு வழங்கி விழாவை சிறப்பித்தார்கள்.
சிறீமுஷ்ணம்
கடலூர் மாவட்டம் சிறீமுஷ்ணம் ஒன்றியம் பாளையங்கோட்டையில் தந்தை பெரியார் சிலைக்கு பெரியண்ணசாமி தலைமையில் மாவட்ட துணைத்தலைவர் மழவை கோவி.பெரியார்தாசன் மாலை அணிவித்தார். தோழர்கள் சமூகநீதி நாள் உறுதி ஏற்றிட பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மாவட்ட இளைஞரணித் தலைவர் சிற்பி சிலம்பரசன், மா.இளைஞரணி செயலாளர் பொன்.பஞ்சநாதன், காட்டுமன்னார்குடி ஒன்றிய தலைவர் முருகன்,கீரை ஒன்றியத் தலைவர் அர.வீரமணி, பாளை தலைவர் தமிழரசன்,பெரியவர் சூசை,அசோக்ராஜ், அசோகச்சக்கரவர்த்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநிலப் பொறுப்பாளர் மு.பாலகுருசாமி, இராகுல்,ப.க.கொழை இசேந்திரன், சிறீமுஷ்ணம் ஒன்றிய செயலாளர் கொழை இராஜசேகரன் மற்றும்தி.மு.க தோழர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து உறுதி மொழி ஏற்றுக்கொண்டு இனிப்புகள் வழங்கி சிறப்பித்தனர்.
குமாரக்குடி
கடலூர் மாவட்டம் சிறீமுஷ்ணம் ஒன்றியம் குமாரக்குடியில் 17.9.2024இல் மாவட்ட இளைஞரணித் தலைவர் சிற்பி சிலம்பரசன் தலைமையில், மாவட்ட கழகத் துணைத் தலைவர் மழவை கோவி.பெரியார்தாசன் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தார். கழகத் தோழர்கள் பொதுமக்களுடன் சமூகநீதி நாள் உறுதி மொழி ஏற்று இனிப்புகளையும் வழங்கினர். மாவட்ட மகளிரணித் தலைவர் சுமதி பெரியார்தாசன் (பொதுக்குழு உறுப்பினர்) கழகக் கொடியை ஏற்றிவைத்தார்.இந்நிகழ்வில் தி.மு.க ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் கவுதமன், செயலாளர் துரைக்கண்ணு, ப.க. செல்வம், பெரியார் பிஞ்சு அறிவன்,பேராசிரியர் கோபிநாத் மற்றும் பலரும் பங்கேற்று சிறப்பித்தனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தலைமைக் கழக அமைப்பாளர் இரா.வீரபாண்டியன் தலைமையில், மாவட்ட தலைவர் வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இந்நிகழ்வில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம், மேனாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், நத்தம் இரா. விசுவநாதன் பங்கேற்றனர்.
பெரியகுளம்
பெரியகுளம் சுடரொளி முத்து கருப்பையா கடை முன்பாக தந்தை பெரியார் ஒளிப்படம் வைத்து மரியாதை செய்யப்பட்டது. உறுதிமொழி ஏற்கப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர் அன்புக்கரசன். ஒன்றிய செயலாளர் ஆதி தமிழன், பரம்பு தமிழ் சங்கத் தலைவர் திருப்பதி வாசகன், மணி கார்த்திக், மாநில திராவிடர் மாணவர் கழக துணைச் செயலாளர் ஸ்டார் நா.ஜீவா, மாவட்டத் துணைத் தலைவர் ஸ்டார் நாகராஜன், ஆண்டிச்சாமி ராமு உள்பட பலர் கலந்து கொண்டார்கள். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி
தந்தை பெரியார் 146ஆவது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டத் தலைவர் சு.கிருட்டிணமூர்த்தி தலைமையில் மாவட்ட ப.க துணைத் தலைவர் ரெ.புகழேந்தி, ஒன்றிய செயலாளர் இரா.அறிவழகன் ஆகியோர் முன்னிலையில் எழிலூர் சமுத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு பெரியார் பிஞ்சு வீஅமுதன், பா.சமரன், ம.அஸ்மதா ஆகியோர் மாலை அணிவித்தார்கள்.
பெரியார் நினைவு சமத்துவபுரம்
தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் கழகத்தோழர்கள் பெரியார் சிலைக்கு மாலையணிவித்து, சமூகநீதி உறுதிமொழி ஏற்றனர்.மக்கள் பெருந்திரளாகக் கூடினர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
சிவகங்கை
17.09.2024 காலை 10 மணிக்கு, சிவகங்கை பையூர் பிள்ளை வயல் சமத்துவபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு சிவகங்கை மாவட்ட கழக தலைவர் இரா.புகழேந்தி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து சிவகங்கை மாவட்ட கழக காப்பாளர் வழக்குரைஞர். ச.இன்பலாதன் மாலை அணிவித்து உரையாற்றினார்.
அதைத் தொடர்ந்து விடுதலை வாசகர் வட்டத் தலைவர் சேதுராமன் மாலை அணிவித்து உரையாற்றினார். தொடர்ந்து தி.மு.க. சொற்பொழிவாளர் தமிழ்ப்பிரியா தந்தை பெரியார் பற்றி சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் சிவகங்கை கழக அமைப்பாளர் ச.அனந்தவேல், வேம்பத்தூர் செயராமன், மீனாட்சி அம்மாள், மானாமதுரை கார்த்தி, ஒக்குர் தெய்வேந்திரன், தி.மு.க. பிரதிநிதி வேங்கை பிரபாகரன், தி.மு.க. கிளைச் செயலாளர் மதிவாணன், தி.மு.க. தொ.மு.க.வைச் சேர்ந்த டாமின் குமார், தி.மு.க. ஒன்றிய பிரதிநிதி காளிதாஸ், மதியழகன், கவிஞர் தமிழ் கனல், சிவகங்கை மாவட்ட ஆம் ஆத்மி கட்சியின் மாவட்டச் செயலாளர் பெரியார் ராமு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் பாலையா, மாவட்ட துணைச் செயலாளர் சுடர்மணி, மண்டல துணைச் செயலாளர் முத்தரசு, சட்டமன்றத் தொகுதி துணைச் செயலாளர் சாத்தையா, மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைச் சார்ந்த மாவட்டத் தலைவர் முத்து பாரதி, மாவட்டச் செயலாளர் காளீசுவரன், அக்கட்சியைச் சேர்ந்த 50க்கு மேற்பட்டோர் வந்திருந்து, தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அனைவருக்கும் சிவகங்கை மாவட்ட கழகத் தலைவர் இரா.புகழேந்தி இனிப்புகள் கொடுத்து, இறுதியில் மாவட்டத் தலைவர் இரா.புகழேந்தி வருகை தந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.
தேனி
தேனி மாவட்ட கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 146ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி பெரியார் பட ஊர்வலத்துடன் தொடங்கியது.
கழக மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில், இளைஞர் அணி தலைவர் லோ.முத்துச் சாமி வரவேற்புரையுடன் ‘உறுதிமொழி ஏற்பு’ நிகழ்ச்சி நடைபெற்றது. சிபிஅய்(எம்) மாவட்ட செயலாளர் தோழர் ஏ.வி.அண்ணாமலை, கழக மாவட்ட அமைப்பாளர் சே. கண்ணன் முன்னிலை வகித்தார்கள்.
நிகழ்வில் சிபிஅய்(எம்) தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் தர்மர், வி.சி.க. அன்பு, வடிவேல், சி.பி.அய். மாவட்ட துணைச் செயலாளர் செல்லான், சிபிஅய் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் பி.ரவீந்திரன், மக்கள் விடுதலைக் கட்சி மாவட்ட செயலாளர் பூமிநாதன், புரட்சித் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சின்னமுத்து, புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கிருட்டிணமூர்த்தி, வி.சி.க. நகரத் தலைவர் ஈஸ்வரன், ஆதித்தமிழர் பேரவை மேற்கு மாவட்ட செயலாளர் நீலகனலன், ஆதித்தமிழர் பேரவை கிழக்கு மாவட்ட துணை செயலாளர் ஈஸ்வரன், தமிழ் தேசிய மார்க்சிய கழக மதியவன், இரும்பொறை, ஹெல்பர் பார்ட்டி ஆப் இந்தியா முகமது சபி மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்பாஸ்பாஸ் மந்திரி, எஸ்.எஸ்.டி.பி.அய். மாவட்ட தலைவர் அபூபக்கர், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட மாணவரணி செயலாளர் குட்டிப்புலி, திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ராமசாமி, தேனிராயர் வன வேங்கைகள் கட்சி மாவட்ட செயலாளர் செந்தில், தேனி நகர தலைவர் ஓவியர் பிரவீன், இளைஞர் அணித் செயலாளர் வெங்கடேசன், திக்கா தொடர் மொக்க மாயன், பெரியார் பெருந்தொண்டர் அன்னக்கொடி, ஆண்டிபட்டி ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்
இளைஞர் அணி துணை செயலாளர் சென்றாயன் நன்றியுரை ஆற்றினார்.
பள்ளிப்பாளையம்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு திருச்செங்கோட்டில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு உறுதி மொழி ஏற்கப்பட்டது.
காவேரிப்பட்டணம்
கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் ஒன்றிய, நகர கழகம் சார்பில் தந்தை பெரியார் 146-ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி காமராசர் பேருந்து நிலையத்திலிருந்து தந்தை பெரியார் – அறிஞர் அண்ணா படம் ஏந்தி பெரியார்பட ஊர்லமாகச் சென்று காவேரிப்பட்டணம் பாலக்கோடு பிரிவு சாலை அருகாமையிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு கிருட்டினகிரி மாவட்ட கழகத் தலைவர் கோ.திராவிடமணி தலைமையில் மாலை அணிவித்து, சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்று, இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைச் செயலாளர்கள் தி.கதிரவன், சி.சீனிவாசன், ஒன்றியத் தலைவர் பெ.செல்வம், ஒன்றியச் செயலாளர் பெ. செல்வேந்திரன், கழக மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வே.புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட ப.க.தலைவர் ச.கிருட்டினன், மாவட்ட ப.க. துணைச் செயலாளர் மா.சிவசங்கர், கிருட்டினகிரி ஒன்றியத் தலைவர் த.மாது, ஒன்றியச் செயலாளர் கி.வேலன், கிருட்டினகிரி நகர செயலாளர் அ.கோ.இராசா, திமுக ஒன்றிய அவைத் தலைவர் இளங்கோவன், சிபிஅய்.ஆர். சங்கர், விசிக ஒன்றிய செயலாளர் பெ.சசிகுமார், ஒன்றிய பொருளாளர் ரகு தேவராஜ், புலி இராஜேஷ், வணிகரணி செந்தில், நகர பொருளாளர் சந்திஸ், மக்கள் அதிகாரம் அருண், கழக மாவட்ட விவசாயணி தலைவர் இல.ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் பூ.இராசேந்திரபாபு, மகளிரணி சி.அஞ்சலி, கல்லூரி மாணவர் கழக தோழர் கி.வீரமணி, பெரியார் பிஞ்சுகள் தி.அ.அனலரசு, தி.அ.அறிவுக்கனல், செ.வீரபாண்டி, மா.அன்புச் செல்வன், மா.அறிவுச்செல்வன் மற்றும் திமுக., விசிக., சிபிஅய். உள்ளிட்ட கட்சிகளின் பொறுப்பார்களும் தோழர்களும் கலந்துகொண்டு இனிப்புகள் வழங்கி, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மண்ணச்சநல்லூர்
தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்தநாள் அன்று காலை மண்ணச்சநல்லூர் நகரம் மற்றும் ஒன்றிய கழகம் சார்பில் முதலில் வாழ்மானப்பாளையம் கீழூர் பெரியார் மன்றத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
பின்னர் வாழ்மானபாளையம், பாச்சூர், நொச்சியம் கிராமங்கள் மண்ணச்சநல்லூர் நகரம் ஆகிய இடங்களில் வசிக்கும் தோழர்கள் இல்லங்கள் மற்றும் பொதுவெளிகளில் கழகக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது
இறுதியில் தோழர்கள் சிறுகனூரில் உள்ள பெரியார் உலகம் சென்று கொடியேற்றுதல், சமூக நீதி நாள் உறுதியேற்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிகளில் நகர, ஒன்றிய கழகத் தோழர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டதுடன் பெரியார் பிஞ்சுகளும் ஏராளமான அளவில் பங்கேற்று சிறப்பித்தனர்
சோழிங்கநல்லூர்
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 146 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக சிறப்பாக நடைபெற்றது
விடுதலை நகர் நூலகத்தில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
அடுத்து நங்கநல்லூர் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார், அறிஞர் அண்ணா சிலைகளுக்குத் தோழர்கள் புடைசூழ மாலைகள் அணிவித்து சமூக நீதி நாள் உறுதி மொழியை மாவட்டத் தலைவர் பாண்டு வாசிக்க அங்குக் கூடியிருந்த கழகத் தோழர்கள் மற்றும் திமுக 12ஆவது மண்டலக் குழுத் தலைவரும், சென்னை மாநகராட்சி 166ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர் சந்திரன் உட்பட ஏராளமான தோழர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
மூவரசம்பட்டு தமிழ்ச் சிந்தனையாளர்கள் பேரவை நிறுவநர் உதயன், கந்தன், சுகுமாறன், வேல்முருகன் ஆகியோரும் மாலை அணிவித்து சிறப்பு செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் தமிழ் இனியன், மாணவர் கழக ஜெ.குமார், மகளிர் அணி தேவி, சக்திவேல், கோவிலம்பாக்கம் சாந்தி, விஜயலட்சுமி, மேடவாக்கம் வெற்றி வீரன், தொழிலாளர் அணி மணிகண்டன், பெரியார் பிஞ்சு பொற்செழியன் உட்பட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.
முத்துப்பேட்டை
புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு ஜாம்பனோடை கருணாநிதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
ஜாம்பனோடை தங்கவேல் இல்லத்தில் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து குடும்பத்தார்கள் சிறப்பு செய்தனர்.
சிவகாசி
சிவகாசி மாநகர் திருத்தங்கல் இரயில்வே கேட் அருகில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாநகரச் செயலாளர் து.நரசிம்மராஜ் தலைமையில், அமைப்பாளர் பெ.கண்ணன், பகுதிக் கழகப் பொறுப்பாளர்கள் மா.நல்லவன், வானவில் ம.கதிரவன், மு.ஜீவாமுனிஸ்வரன் மற்றும் தி.முக., விடுதலைச் சிறுத்தைகள், பொதுவுடைமை இயக்கத் தோழர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அருகருகே அமைந்துள்ள புரட்சியாளர் அம்பேத்கர், அறிஞர் அண்ணா சிலைகளுக்கும் மாலை அணிவித்தனர்
சாத்தூர்
சாத்தூர் திராவிடன் இல்ல வாயிலில் 17.09.2024 செவ்வாய் காலை 9 மணியளவில் பகுத்தறிவாளர் கழக அமைப்பாளரும், நகர் மன்றத் துணைத் தலைவருமான பா.அசோக் தலைமையில் தந்தை பெரியார் அவர்கள் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அ.செல்வம் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
மதுரை
மதுரை ஆத்திகுளம்பெரியார் பெருந்தொண்டரும் ஓய்வுபெற்ற ஆசிரியருமான புரவலர் இராமசாமி விடுதலை வாசகர்வட்டத்தலைவர் இராஜேஸ்வரி ஆகியோர் இல்லத்தில் மக்களுக்கு இனிப்பு வழங்கி பெரியார் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார்.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் மாவட்ட கழகம் சார்பில் தந்தை பெரியாரின் 146ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது
மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் மாவட்ட தலைவர் சு.வேலுச்சாமி தலைமையில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் கழக தோழர்கள் உள்ளிட்ட அனைவரும் சமூக நீதி நாள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்
நிகழ்வில் மாவட்ட கழக செயலாளர் கா.சு.அரங்கசாமி, இராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
நடூர் பகுதியில் நடைபெற்ற தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா மாவட்ட கழக அமைப்பாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் கழகக் கொடி ஏற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கபட்டது.
அதை தொடர்ந்து காந்திபுரம் பகுதியில் கழகக் கொடி ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கபட்டது
முன்னதாக காரமடை புஜங்கனூர் பகுதியில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் ரா.நாகமணி கழக கொடி ஏற்றி வைத்தார்
சாலை வேம்பு பகுதியில் கழக காப்பாளர் சாலை வேம்பு சுப்பையன் தலைமையிலும் மற்றும் மேடூர் பகுதியில் ரா.முருகசாமி தலைமையிலும் தந்தை பெரியார் பிறந்த பிறந்தநாள் விழா நடைபெற்றது
தொடர்ந்து நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்கள் முகாம் அலுவகத்தில் தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
மேட்டுப்பாளையம் நகராட்சி துணை தலைவர் அருள் வடிவு , நகர செயலாளர் முனுசாமி , காரமடை நகர செயலாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட ஏராளமான திமுக தோழர்கள் பங்கேற்றனர்
உசிலம்பட்டி
தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்த நாள் விழா, உசிலம்பட்டி கழக மாவட்ட சார்பில், திருமங்கலம் நகர் பெரியார் சிலைக்கு, பெரியார் படங்களை ஏந்தி பேரணியாகச் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மொ.தங்கத்துரை பகுத்தறிவாளர் கழகம் தலைமையில் முன்னிலை : த.ம.எரிமலை உசிலம்பட்டி கழக மாவட்ட தலைவர், பா. முத்துக்கருப்பன் உசிலம்பட்டி கழக மாவட்ட செயலாளர், கா. சிவகுருநாதன் தொழிலாளர் பேரவை தலைவர்,, சி. பாண்டியன் காப்பாளர், மு.சண்முகசந்தரம் நகர தலைவர், ரோ. கணேசன் மாவட்ட அமைப்பாளர், ஏ.பி.சாமிநாதன் மாவட்ட இளைஞரணி தலைவர், பா.சதீஷ்குமார் மாவட்ட மாணவரணி தலைவர், பா.பாஸ்கரன் மாவட்ட இளைஞரணி செயலாளர், ம.ரஞ்சித்குமார் மாவட்ட மாணவர் கழகம் முன்னிலையேற்க செயலாளர், பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார் மாநில வழக்குரைஞரணி துணை செயலாளர் நா.கணேசன்.
மற்றும் தோழமை கட்சி பொறுப்பாளர்கள் கு.சந்தானம் இந்திய கம்யூனிஸ்ட் விவசாய அணி மாவட்ட செயலாளர், சுப்ரமணியன் விசிக ஒன்றிய செயலாளர், மக்கள் அதிகாரம் வீரணன், நாகராஜ், மதுரைவீரன் தமிழ்புலிகள் கட்சி, மற்றும் ஏராளமான பொதுமக்களும், தோழர்களும், கலந்து கொண்டு சிறப்பித்தனர். திருமங்கலம் மட்டுமல்லாது மதுரை கண்ணியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெரியார் நாகம்மை நகர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது, தமிழ்நாட்டு முதல் சமத்துவபுரமான மேலக்கோட்டை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியை உசிலம்பட்டி மாவட்ட கழகத்தின் சார்பாக சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.