எருமப்பட்டி, அக்.7- எருமப்பட்டி யூனியன், பீமநாய்க்கனுாரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தர்மகர்த்தா வாகவும், பூசாரியாகவும் உரிமை கொண்டாடி இரு தரப்பினர் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், ஒரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், 5.10.2024 அன்று ஒரு தரப்பினர், ‘கோவிலில் பூசாரியாக உரிமை கொண்டாட எங்களுக்கு தான் உரிமை உள்ளது’ எனக்கூறி, கோவிலை திறக்க வந்த னர். இதற்கு மற்றெரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பீமநாய்க்கனுாரில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து விரைந்து சென்ற எருமப்பட்டி காவல் துறையினர், இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். பின், சேந்தமங்கலம் தாசில்தார் வெங்கடேசன், இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி னார். இதில், கோவில் திறக்க தடை ஆணை உள்ளதாக ஒரு தரப்பினர் கூறும் நிலையில், வரும், 21ஆம் தேதிக்குள் தடை ஆணையை ஒரு தரப்பினர் தர வேண்டும்; இல்லை என்றால் கோவிலை திறக்க அனுமதி வழங்கப் படும் என, முடிவு செய்யப் பட்டது.