ஆலங்குளம், அக். 6- தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் 27.09.2024 அன்று தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.
கழக பேச்சாளர் தேவ. நர்மதா சிறப்புரையாற்றினார்.
திமுக மேனாள் நகரச் செயலாளர் பாப்புலர் செல்லத் துரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யின் பொறுப்பாளர் பாக்கியராஜ், வேல்முருகன், வழக்குரைஞர் மனோகரன், கார்த்திக், பகுத்தறிவாளர் கழகத்தை சார்ந்த சீனிவாசன், மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த. வீரன், மாவட்டச் செய லாளர் கை. சண்முகம் மற்றும் தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள்.
இறுதியாக திராவிட மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் செங்கதிர் வள்ளுவன் நன்றியுரை கூறினார்.