பெங்களூருவில் தந்தை பெரியார்-அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா எழுச்சியுடன் கொண்டாட்டம்

1 Min Read

பெங்களூரு, அக். 6- பெங்களுரில் அறிவாசான் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. பெங்களூர்த் தமிழ்ச்சங்கம், மூன்றாம் தளம் திராவிடர் அகம், பெரியார் மய்யம், தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அரங்கில் 22.9.2024 அன்று காலை 10 மணிக்கு எழுச்சியுடன் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பாக மாநிலத் தலைவர் மு.சானகிராமன் தலைமையில் தொடங்கியது.
கழகத் தோழர்கள் அனை வரையும் மாநிலத் துணைத் தலைவர் வழக்குரைஞர் சே.குண வேந்தன் வரவேற்று நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

முதலாவதாக கழகக் கொடி யினை அனந்தபுரம் அஜந்தா டோனிராஜ் பலத்த கரவொலிக்கு இடையே ஏற்றி வைத்தார்.
வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தந்தை பெரியார் அவர்களின் படத்தினை பெங்களூர்த் தமிழ்ச் சங்கத் தலைவர் கோ.தாமோதரன் திறந்து வைத்தார். அண்ணாவின் படத்தினை தி.மு.கழக மாநில பொருளாளர் கே.தட்சிணாமூர்த்தி திறந்து வைத்தார். கலைஞர் அவர்களின் படத்தினை மாநிலத் துணைத் தலைவர் வி.மு.வேலு திறந்து வைத்து உரை நிகழ்த்தினர்.

சென்னை நீலாங்கரை மாவட்ட கழக காப்பாளர் ஆ.டி.வீரபத்திரன் நெடிய நேரம் சிறப்புரை நிகழ்த்தினார். பெரியார், அண்ணா, கலைஞர் வாழ்வியல் பற்றி விளக்கமாக சிறப்புரை நிகழ்த்தினார். வி.வரதராசன் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
அமுதபாண்டியன், இரா.இராசாராம், ஜெ.அருண், சி.வரதராசன், இரா.திருநாவுக்கரசு, கர்ணன், இரா.கிருட்டிணமூர்த்தி, ஆனந்தராஜ், வே.பாவேந்தன், இரா.கிருட்டிணமூர்த்தி, இரா.பழனிவேல், சு.சக்கரவர்த்தி, வி.கிருபாநிதி, பி.இரா.செல்வராஜ், சே.குணவேந்தன், தினேஷ் குமார் ஆகியோர் பெரியார், அண்ணா, கலைஞரைப் பற்றியும் கழகத் தோழர்களின் உரிமைகளையும், கடமைகளையும் எடுத்து விளக்கி உரை நிகழ்த்தினர்.
சத்தியவாணி ஆனந்தன், அறிவழகன், செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

துணைச் செயலாளர் கு.ஆனந்தன் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
பெரியார் மய்யம் முழுவதும் வண்ண மின் விளக்குகளாலும், கழகக் கொடிகளாலும் அலங் கரிக்கப்பட்டது. தமிழ்ச் சங்க முக்கிய கழகக் கொடிகள் கட்டப் பட்டன. மேலும் தலைமைக் கழகத்தால் வழங்கப்பட்ட தந்தை பெரியார் சுவரொட்டிகள் பலகையில் ஒட்டி பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *