தமிழ்நாட்டில் 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு டீன்கள் நியமனம் : அரசாணை வெளியீடு

2 Min Read

சென்னை, அக்.5- தமிழ்நாட்டில் 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய (கல்வி நிலைய முதல்வர்) டீன்கள் நியமனம் செய்து, தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப் பித்துள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 14 மருத்துவக் கல்லூரிகளில் டீன் பணியிடங்கள் காலியாகவே இருந்து வந்தன. அந்த பதவியிடங்களில் பொறுப்பு டீன்களே பணியாற்றி கொண்டிருந்தனர். இந்த நிலையில் அந்த 14 பணியிடங்களுக்கும் புதிய டீன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தமிழநாடு அரசின் சுகா தாரத்துறை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:- சென்னை மருத்துவக் கல்லூரி சிறுநீரகவியல் பேராசிரியர் மருத் துவர் சிவசங்கர், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியின் டீன் ஆக நியமிக்கப் பட்டுள்ளார். அதே போல, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர் கண்காணிப்பாளர் மருத்துவர் பவானி, கள்ளக் குறிச்சி மருத்துவக் கல்லூரிக் கும், கோவை அரசு மருத்து வக் கல்லூரி பேராசிரியர் மருத்துவர் ரவிக்குமார், ஈரோடு மருத்துவக் கல்லூரிக்கும், நெல்லை மருத்துவக்கல்லூரி கண் மருத்துவத்துறை பேராசிரியர் மருத்துவர் ராமலட்சுமி, கன்னியாகுமரி மருத்துவக்கல்லூரிக்கும் டீன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சை மருத்துவக் கல்லூரியின் எலும்பியல் பேராசிரியர் மருத்துவர் குமர வேல், திருச்சி மருத்துவ கல்லூரிக்கும், மதுரை மருத்துவக் கல்லூரி இ.என்.டி. துறை பேராசிரியர் மருத்துவர் அருள் சுந்தரேஷ்குமார், மதுரை மருத்துவக் கல்லூரிக்கும், கன்னியாகுமரி மருத்துவ கல்லூரி உதவி டீன் மருத்துவர் லியோ டேவிட், கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரிக்கும் டீன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மருத்துவக் கல்லூரி மயக்க வியல் பேராசிரியர் மருத்துவர் அமுத ராணி, ராமநாதபுரம் மருத் துவக் கல்லூ ரிக்கும், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி கதிரியக்க நோயறிதல் துறை பேராசிரியர் மருத்துவர் தேவி மீனாள், சேலம் மருத்துவ கல்லூரிக்கும், சென்னை மருத்துவக் கல்லூரி தோல்துறை பேராசிரியர் மருத்துவர் கலைவாணி, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரிக்கும் டீன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி இ.என்.டி. துறை பேராசிரியர் மருத்துவர் முத்து சித்ரா, தேனி மருத்துவ கல்லூரிக்கும், கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி உடற்கூறியல் பேராசிரியர் மருத்துவர் லோகநாயகி, கரூர் மருத்துவக் கல்லூரிக்கும், கோவை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மருத்துவர் ஜெயசிங், விருதுநகர் மருத்துவக் கல்லூரிக்கும், கோவை மருத்துவக் கல்லூரி உடற்கூறியல் பேராசிரியர் டாக்டர் ரோகினிதேவி, வேலூர் மருத்துவக் கல்லூரிக்கும் டீன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *