பார்வையாளர்கள் சந்திப்பு: புழல் சிறையில் புதிய விதிமுறைகள்

viduthalai
3 Min Read

புழல், அக்.5- புழல் சிறையில் கைதிகளை பார்வையாளர்கள் சந்திக்க புதிய நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பார்வையாளர்கள் சந்திப்பு

சென்னையை அடுத்த புழல் விசாரணை சிறையில் 3,400-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். நாள் தோறும் இந்த கைதிகளை பார்க்க அவர்களது உறவினர் கள், நண்பர்கள் என 700 முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின் றனர்.

இதனால் சிறை வளாகத் தில் பார்வையாளர் பகுதி யில் கூட்ட நெரிசல் ஏற்படுவ தோடு, போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வந்தது.
அத்துடன் கைதிகளை சந்திக்க பார்வையாளர்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியது இருந்தது.

இவற்றை தவிர்த்திட தற் போது புதிய நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி சிறை கைதிகளை சந்திப்பதற்காக அரை மணிநேரம் கொண்ட 13 சுற்றுகள் அட்ட வணைப் படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சுற்றிலும் 56 கைதிகள் பார்வையாளர்களை சந்திக்கும் வகையில் தனித்தனியாக அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

முன்பதிவு

இந்த அட்டவணைப்படி வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை (அரசு விடுமுறை நீங்கலாக) காலை 8 மணி முதல் மாலை 5.30 மணிவரை ஏதேனும் 2 நாட்களில் கைதிகள் தங்கள் உறவினர்களை சந்திக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் கைதிகள் சந்திக்க வரும் பார்வையாளர்கள் வசதிக்காக முன்பதிவு முறையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 044- 26590000 என்ற எண்ணில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கைதிகளை சந்திக்க வரும் பார்வையாளர்கள் வசதிக்காக முன்பதிவு முறையும் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. இதற்காக 044- 26590000 என்ற எண்ணில் காலை 8 மணி முதல் இரவு 8மணிவரை கைதி களை சந்திப்பதற்கு வசதி யான நேரத்துக்கு ஒரு நாள் முன்ன தாவே முன்பதிவு செய்து கொள்ளலாம். இவர்கள் பதிவு செய்த நேரத்துக்கு 45 நிமிடங்கள் முன்னதாக வந்தால் போதும். இந்த புதிய நடைமுறையின் மூலம் பார்வவையாளர்கள் கைதிகளை காலதாமதம், கூட்ட நெரிசல் இன்றி மிகவும் எளிய முறையில் சந்திக்கமுடியும்.

இதே போல் வழக்குரைஞர் கள் சந்திக்கும் அறையும் புனரமைக்கப்பட்டுள்ளது. அதன்படி வழக்குரைஞர்கள் சந்திப்பு அறையில் புதிய அறைகள் அமைத்து கைதிகள், வழக்குரைஞர்களுக்கு புதிய இருக்கைகள் அமைக்கப்பட் டுள்ளது.

இதன் மூலம் ஒரே நேரத்தில் 50 வழக்குரைஞர்கள் கைதிகளை சந்திக்க முடியும். இவர்களுக்கும் முன் பதிவு செய்ய தொலைபேசி எண் வழங்கப்பட்டு உள்ளது. புதிய நடைமுறையின்படி வழக்குரைஞர்கள் தற்போது திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை கைதி களை சந்திக்கலாம். இதனால் வழக்குரைஞர்கள், கைதிகளை வழக்கு சம்பந்தமாக சந்தித்து பேச போதுமான நேரம் கிடைக் கிறது.

அமைச்சர் திறந்து வைத்தார்

புழல் சிறையில் மேம்படுத் தப்பட்ட பார்வையாளர் சந்திப்பு அறை மற்றும் புனர மைக்கப்பட்ட வழக்குரைஞர் நேர்காணல் அறையை நேற்று முன்தினம் (3.10.2024) சிறைத் துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.

இதேபோல் புழல் தண் டனை சிறையில் 800க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக் கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பறை இசை, நாடகம், சங்கீத பயிற்சி, காட்சி கலைகள், பாட்டு கச்சேரி, கானா ஆகியவற்றை தனியார் தொண்டு நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சி நிறைவு விழாவிலும் அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு பயிற்சி பெற்ற கைதிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். இதில் சிறைத்துறை தலைமை இயக்குநர் மகேஷ்வரர் தயாள், மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், சிறைத் துறை தலைவர் (தலைமையிடம்) கனகராஜ், சென்னை சரக சிறைத்துறை துணைத்தலைவர் முருசேன், தொண்டு நிறுவன நிறுவனர் கிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *