எந்த ஆதரவும் இன்றி தென்னாப்பிரிகா டர்பன் நகர சாலை ஓரம் நின்றிருந்த ஒரு சிறுமி படுத்த படுக்கையாக கிடந்த தனது தாய்க்கு உணவு கேட்டு சாலை ஓரம் கையேந்தி நின்றார். அப்போது இரக்கமுள்ள ஒருவர் தான் வாங்கிய ரொட்டிப் பாக்கெட்டுகளுள் ஒன்றை அவள் கையில் தந்தார். அந்தக் குழந்தை அந்த ரொட்டியை தனது தாய்க்கு கொடுக்கச் சென்றுகொண்டு இருந்தபோது ஒளிப்படக் கலைஞர் ஒருவர் அவரைப் ஒளிப்படம் எடுக்க முயல்கிறார்.
தான் தாயின் பசியைப் போக்க ரொட்டி கிடைத்து விட்டதே என்ற மகிழ்ச்சி அச்சிறுமியின் சிரிப்பில் மிளிர்ந்தது. அப்படம் சமூகவலைதளத்தில் திடீரென பிரபலமானது. இந்த நிலையில் அந்த ரொட்டி நிறுவனத்தின் விற்பனை பலமடங்கு அதிகரித்ததை உணர்ந்த அந்த நிறுவனம் இதற்குக் காரணம் அந்தச் சிறுமியின் சிரிப்பும் அவள் கையில் இருக்கும் தனது நிறுவன ரொட்டியும்தான் என்று அறிந்துகொண்டது.
தற்போது அச்சிறுமியை தனது நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக மாற்றி அவருக்கு கல்வி மற்றும் அனைத்து உதவிகளையும் வழங்க முன்வந்துள்ளது. டர்பன் நகரில் வீடு ஒன்றையும் அவருக்கு கொடுத்து அவரது தாய்க்கு மருத்துவச் சிகிச்சையும் கொடுத்துள்ளது.