புதிய கல்விக்கொள்கையின் படி தனியார் பள்ளியில் ஏழைகள் படிக்க விரும்பினால் அதற்கான கட்டணத்தை அரசே தனியார் பள்ளிக்குக் கொடுக்கும், என்று ஒரு அறிவிப்பும் உள்ளது. இது அரசுப்பள்ளிகளை மூடிவிட்டு தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் மோசமான திட்டம் என்று கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
ஆனால் இதை எல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் பாஜக ஆளும் மாநிலங்கள் தொடர்ந்து புதியக் கல்விகொள்கையை நடைமுறைப் படுத்தி வருகிறது.
இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தில் பாக்பக் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் அரசு கொடுக்கவேண்டிய கட்டணம் இதுவரை வராத காரணத்தால் ஒட்டுமொத்த ஏழை மாணவர்களையும் பள்ளியில் நுழையவிடாமல் வெளியே வெயிலில் அமரவைத்துவிட்டது பள்ளி நிர்வாகம்
இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்று பள்ளி நிர்வாகத்திடம் கேட்ட போது அரசு பணம் தரும் என்று பெற்றோர்கள் நம்பவேண்டாம், அவர்கள் தரும் வரை நாங்கள் பள்ளியை எப்படி நடத்துவது, ஆகவே பெற்றோர்கள் முதலில் அவர்கள் கட்டணம் கட்டவேண்டும்.என்று கூறினோம் ஆனால் பெற்றோர்கள் கட்டணம் கட்ட பணம் இல்லை என்று கூறிவிட்டனர்.
கட்டணம் இல்லாமல் எங்களால் பள்ளியை நடத்த முடியாது. ஆகவே, பிள்ளைகளை வீட்டுக்கு அனுப்பினோம். ஆனால் அவர்கள் வாசலில் அமர்ந்து விட்டார்கள் என்று கூறினார்கள். பள்ளிக் கல்வித்துறையிடம் இது குறித்து கேட்டால் சரியான பதில் வரவில்லை
புதிய கல்விக்கொள்கை பற்றி கூறிம்போது எல்லாம் தமிழ்நாடு பாஜகவினர் ஏழைகளுக்கு தரமான கல்வி கிடைக்கும் – இதுதான் மோடி அரசின் நோக்கம் என்று கூறுகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் புதிய கல்விக்கொள்கை என்பது பணக்காரர்களின் பிள்ளைகளுக்கு மட்டுமேயான சிறப்புக் கல்விகொள்கை ஆகும். இதற்கு ஏழை மாணவர்களை வெளியில் அமரவைத்துள்ள உத்தரப் பிரதேசமே சாட்சியாக உள்ளது.