தருமபுரி, அக். 4- தருமபுரி மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் 2.10.2024 அன்று தருமபுரி பெரியார் மன்றத்தில், நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு செ. இனியன் பிரபாகரன் அனைவரையும் வரவேற்புரையாற்றினார். திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் தலைமை யேற்றார்.
க.செந்தில் குமார் ப.க தலைவர், இர. கிருஷ்ணமூர்த்தி ப.க மாவட்ட செயலாளர், தி.அன்பரசு ப.க அமைப்பாளர், பெ.கோவிந்தராஜ் மேனாள் மாவட்ட செயலாளர் முன்னிலை வகித்தனர்.
மாநில சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் மு. இளமாறன் தொடக்கவுரையாற்றினார்.
தலைமை கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன் வழிகாட்டல் உரையாற்றினார். இக்கூட்டத்திற்கு மாநில மகளிரணி செயலாளர் தகடூர். தமிழ்செல்வி, மாவட்ட தலைவர் கு.சரவணன், மாவட்ட செயலாளர் பீம.தமிழ்பிரபாகரன், மாநில இளைஞரணி துணை செயலாளர் செல்லதுரை ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில் அ.அகரன், அ.அன்றில், ச.கி.செம்மொழி அரசு, சே.ரெஜினா, ஜெ.கனிஷ்கா, ஜெ.அன்பெழில், சே.ஆதி தமிழன், க.பிரதாப், ச.தென்னரசு பெரியார், அ.அருள் குமார், மா.சென்றாயன், சோபியா, மஞ்சு, கண்.ராமச்சந்திரன், முனுசாமி, பெ.மாணிக்கம், மு.சிசுபாலன், மாதேஷ், ஊமை. காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கலந்துரையாடல் கூட்டத்தில், திராவிட மாணவர் கழக புதிய கிளைகளை தருமபுரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் அமைப்பது எனவும், தந்தை பெரியார் 146ஆவது பிறந்த நாள் விழாவை தருமபுரி மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் கருத்தரங்கம், பயிலரங்கம், கவியரங்கம் ஆகியவை நடத்துவது எனவும், உண்மை மாத இதழுக்கு தருமபுரி மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 50 சந்தாக்களை திரட்டி தருவது எனவும். தந்தை பெரியார் 146ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திராவிட மாணவர் கழகம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள துண்டறிக்கையினை பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் அளிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
மாவட்ட திராவிட மாணவர் கழக அமைப்பாளர் ச.கி வீரமணி நன்றியுரையாற்றினார்.