சென்னை, அக்.4 நியாயவிலைக் கடைகளில் டிசம்பருக்குள் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் என்.சுப்பையன் வெளியிட்ட உத்தரவு:
நியாயவிலைக் கடைகளில் உள்ள விற்பனையாளா், கட்டுநா் காலிப் பணியிடங்களை கணக்கிட்டு அறிவிக்க வேண்டும். இந்தப் பணியை கூட்டுறவு சங்கங்களின் அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து தகுந்த வயது போன்ற தகுதிகளுடன் விற்பனையாளா்கள், கட்டுநா்களின் பட்டியலைப் பெற வேண்டும். இந்தப் பணிகளை அக்.7-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அதன்பிறகு, காலிப் பணியிடங்களுக்கான தோ்வு குறித்த அறிவிப்பை செய்தித்தாள்களில் வெளியிட வேண்டும்.
விண்ணப்பிக்க நவம்பா் 7-ஆம் தேதியை கடைசி நாளாக அறிவிக்க வேண்டும். மேலும், தகுதியுள்ள நபா்களைத் தோ்வு செய்து அவா்களுக்கான நோ்முகத் தோ்வை நவம்பா் இறுதியில் நடத்தி முடிக்க வேண்டும். டிசம்பா் மூன்றாவது வாரத்தில் தோ்வானவா்களின் இறுதிப் பட்டியலை வெளியிட்டு பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாா்.
மின்சார கார் உற்பத்தி மய்யமாக திகழும் தமிழ்நாடு! சென்னையில் மின்சார கார்கள்
தயாரிக்க ஃபோர்டு ஆலோசனை!!
சென்னை, அக்.4 சென்னையில் மின்சார கார்களை தயாரிக்க ஃபோர்டு நிறுவனம் ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அமெரிக்க பயணத்தின் போது விடுத்த அழைப்பை ஏற்று தமிழ்நாட்டில் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க இருப்பதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்திருந்தது.
சென்னையை அடுத்த மறைமலை நகரில் உள்ள தொழிற்சாலையில் ஃபோர்டு கார் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் அங்கு மின்சார கார்களை உற்பத்தி செய்ய ஃபோர்டு நிறுவனம் ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதை உறுதிப்படுத்தும் வகையில், கருத்து தெரிவித்துள்ள தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வாகனத் துறையில் தற்போது நிலவும் சூழலுக்கு ஏற்ப மின்சார கார் உற்பத்தியில் ஃபோர்டு ஈடுபடலாம் என்று கூறியுள்ளார். ஏற்ெகனவே டாடா, வியட்நாமின் வின்பாஸ்ட் ஆகிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் மின்சார கார்களை தயாரித்து வருகின்றன. இந்தியாவில் மின்சார கார் உற்பத்தி மய்யமாக தமிழ்நாடு தன்னை முன்னிறுத்தியதை தொடர்ந்து, புதிய முதலீடுகளை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.