அமெரிக்க ஆணையம் அறிக்கை
நியூயார்க், அக்.4 ‘இந்தியாவில் மத சிறுபான்மையினருக்கு எதி ரான அடக்குமுறை அதிகரித்து வருகிறது; மதச் சுதந்திரம் மோசமான நிலையில் உள்ளது’ என்று பன்னாட்டு மதச் சுதந் திரத்துக்கான அமெரிக்க அரசின் ஆணையத்தின் (யுஎஸ்சி அய்ஆா்எஃப்) ஆண்ட றிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், மதச் சுதந்திர மீறல்கள் அடிப்படையில் கவலைக்குரிய நாடாக இந்தி யாவை அறிவிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் பரிந்து ரைக்கப்பட்டுள்ளது.
‘இந்தியாவில் சட்டத்தை கையிலெடுக்கும் குழுக்களால் நடப்பாண்டில் தனிநபா்கள் பலா் தாக்கப்பட்டும், கொல்லப்பட்டும் உள்ளனா். சிறுபான்மையின மதத் தலைவா்கள், பத்திரிகையாளா்கள், மனித உரிமை ஆா்வலா்கள் மீதான தன்னிச்சையான கைது நடவடிக்கைகளும், சிறுபான்மை யினரின் வீடுகள், வழிப்பாட்டு இடங்கள் இடிக்கப்பட்ட நிகழ்வு களும் தீவிரமான மதச் சுதந்திர மீறல்கள்.
தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம், வக்ஃப் சட்ட திருத்த மசோதா, மாநில அளவிலான மத மாற்றத் தடை சட்டங்கள், பசுவதை தடுப்புச் சட்டங்கள், பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்கள், பொது சிவில் சட்டம் உள்ளிட்டவை சிறுபான்மையினரை குறிவைத்து, இந்தியாவின் சட்ட கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்க ளாகும்.
அண்மைய மக்களவைத் தோ்த லின்போது, ஆட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளவா்களால் மத சிறுபான்மையினருக்கு எதி ரான வெறுப்புணா்வு கருத்துகள் முன்வைக்கப்பட்டன. மத சிறுபான்மையினா் மற்றும் அவா்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக வன்முறை தூண்டுவதற்கு இத்தகைய பேச்சுகள் மட்டுமின்றி, பொய்யான தகவல்களும் பயன்படுத்தப்பட்டன.
தொடா்ந்து மதச் சுதந்திர மீறல்களில் ஈடுபட்டு வருவதால், இந்தியாவை கவலைக்குரிய நாடாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அறிவிக்க வேண்டும்’ என்று அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனினும், இப்பரிந்துரை மீது அமெரிக்க வெளியுறவு அமைச்ச கம் இதுவரை எந்த முடிவும் எடுக்க வில்லை.