சென்னை, அக்.3- அண்மையில் பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நிதியை விடுவிக்க வலியுறுத்தி இருந்தார். ஒன்றிய அரசு நிதி வழங்காததால் சமக்ர சிக்ஷா அபியான் திட்டப் பணியாளர்கள் 20,000 பேருக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ் நாட்டுக்கான ரூ.2,151 கோடியை ஒன்றிய அரசு இன்னும் வழங்கவில்லை. ஒன்றிய அரசு நிதி வழங்காத போதும் கடந்த 4 மாதங்களாக மாநில அரசின் நிதியில் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், பிரதமரிடம் முதலமைச்சர் நேரில் வலியுறுத்திய போதும் நிதியை விடுவிக்காத ஒன்றிய அரசுக்கு ஆசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசின் நிதியில் இருந்து ஊதியத்தை வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.