பினாங்கு, அக்.1 மலேசிய திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவர் டத்தோ ச.த.அண்ணாமலை – டத்தின் கோ.அங்காய் அவர்களின் 55ஆவது மணமேடை நாள் பினாங்கு, பட்டவோர்த், படாவி அரங்கில் மலேசிய திராவிடர் கழக பினாங்கு மாநிலக் கிளை ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது. பினாங்கு மாநிலத் தலைவர் செ.குணாளன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் பொன்.பொன்வாசகம் வாழ்த்துரை வழங்கினார். நீண்ட நெடிய கழக வரலாற்றில் 13ஆவது தலைவராக பல சவால்களை எதிர்கொண்டு சிறந்ததொரு தலைமைத்துவத்தை வழங்கியதிற்கு நன்றிகூறி பாராட்டி வாழ்த்தினார். பாகான் ஆஜாம் கிளைத் தலைவர் க.இராமன், கூலிம் கிளை துணைத் தலைவர் மு.மாரிமுத்து, பட்டவோர்த் கிளைத் தலைவர் இரா.ப.தங்கமணி, கெடா மாநிலத் தலைவர் மு.குமாரி அவர்களுடன் கலந்துக்கொண்ட சிறப்பாளர்களும் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் கழக தேசிய உதவித் தலைவர் வீ.இளங்கோவன், உதவித் தலைவர் இரா.மனோகர், தேசியப் பொருளாளர் கு.கிருட்டிணன், தேசிய நிதிச் செயலாளர் இரா.காளிதாசன், தேசிய இளைஞர் செயலாளர் விக்கினேசுபாபு, மத்தியச் செயலவை உறுப்பினர் பெ.இராசேந்திரன், கெடா மாநிலத் தலைவர் மு.குமாரி, கெடா மாநிலச் செயலாளர் இளஞ்செல்வி, மற்றும் எண்ணற்ற கழகத் தோழர்கள் திரளாகக் கலந்துக்கொண்டனர்.