விழுப்புரம், அக். 1- செப்டம்பர் 17இல் தந்தை பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக விழுப்புரம் கழக மாவட்டத்தின் சார்பில் செஞ்சியில் இரு இடங்களில் தந்தை பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதற்கடுத்து விழுப்புரம் மாநகரில் தொழிற்சங்கம் மற்றும் மாவட்ட கழகத் துடன் மக்கள் அதிகார அமைப்பும் இணைந்து பறையிசையுடன் ஊர்வல மாக சென்று போக்குவரத்து கழக அலுவலகத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும் சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்கப்பட்டது.
சிறப்பாக தந்தை பெரியார் சிலையை பராமரிப்பு செய்திட்ட மேலாண்மை இயக்குநரை சந்தித்து இயக்க நூல்களை அளித்து நன்றி தெரிவித்தோடு
போக்குவரத்து கழக நூலகத்திற்கு உண்மை மற்றும் விடுதலை நாளேட்டினை வாங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும் நகரின் உள்ளே அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு திமுக; பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் மக்கள் அதிகார அமைப்பும் இணைந்து பறையிசையுடன் ஊர்வலமாக சென்று தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும் தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பாடல்கள் இசைத்தும் அய்யாவின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பங்கேற்றார்: மாவட்ட தலைவர் சே.வ.கோபன்னா; செயலாளர் அரங்க.பரணிதரன்; மாநில அமைப்பாளர் தா.இளம்பரிதி; மாவட்ட ப.க. தலைவர் துரை.திருநாவுக்கரசு; து.தலைவர் க.திருநாவுக்கரசு; மாவட்ட து.செயலாளர் இரமேசு; செஞ்சி நகர செயலாளர் நந்தகுமார், விழுப்புரம் நகர தலைவர் கொ.பூங்கான்; செயலாளர் பழனிவேல், மயிலம் ஓ.செயலாளர் அன்புக்கரசன்; மேல்மலையனூர் ஒ.தலைவர் பாடகர் காத்தவராயன்; பெரியார் பெருந்தொண்டர் ஆ.மு.ரா.இளங்கோவன்; மாவட்ட இளைஞர் அணி செயலாளர் த.பகவன்தாசு; மற்றும் திருவெண்ணெய்நல்லூர் பரந்தாமன் ஆகிய கழக தோழர்களுடன் திமுக நகர செயலாளர் இர.சக்கரை; நகராட்சி தலைவர்; தொமுச இரவிச்சந்திரன் பழங்குடி மக்கள் முன்னணி தலைவர் சுடரொளி சுந்தரம்; பட்டியல் இன இளைஞர் அணி செயலாளர் தென்னரசு; மக்கள் அதிகார மகேசு, பகத்சிங் குழுவினருடன் பகுஜன் கட்சியினடன் திரளானோர் கலந்து கொண்டு மிக சிறப்பாக தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.