மும்பை, செப்.30 ஒன்றிய அரசின் மொத்த கடன்தொகை 2024–-2025, ஜூன் காலாண்டின் முடிவில் ரூ.176 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு இதேகால கட்டத்தில் அரசின் கடன் 141 லட்சம் கோடியாக இருந்த நிலையில் தற்போது 25 சதவீதம் உயர்ந்து ரூ.1.76 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது மொத்த கடன் தொகையில் வெளிநாட்டு கடன் மதிப்பு ரூ.9.78 லட்சம் கோடியாக உள்ளத. இது கடந்தாண்டு இதே கால கட்டத்தில் ரூ.8.50 லட்ம் கோடியாக இருந்தது. அதேபோல உள்நாட்டுக் கடன் தொகையில் அரசின் பத்திரங்கள் மூலம் ரூ.104.5 லட்சம் கோடியும் குறுகிய கால சேமிப்பின் பாதுகாப்பு பத்திரங்கள் மூலம் ரூ.27 லட்சம் கோடியும், கருபூல பத்திரம் (டி.பில்கள்) மூலம் ரூ.10.5 லட்சம் கோடியும், தங்க பத்திரங்கள் மூலம் ரூ.78,500 கோடியும் நிதி திரட்டப்பட்டுள்ளது.