சென்னை, செப். 28- தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் “ஆராய்ச்சி நாளினை” முன்னிட்டு பல்வேறு போட்டிகளை நடத்தியது. இதில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருந்தாக்கவியல் துறைத் தலைவர் முனைவர் இரா. இராஜகோபாலனின் வழி காட்டுதலில் இளநிலை மருந்தியல் நான்காம் ஆண்டு மாணவி யு.கிருத்திகா Role of Artificial Intelligence in Medicine என்ற தலைப்பிலான ஆராய்ச்சிக் கட்டுரையினை சமர்ப் பித்தார்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளும் பங்கு பெற்ற இப்போட்டியில் ஆராய்ச்சிக் கட்டுரையில் மாணவி யு.கிருத்திகா முதல் பரிசும் Impact of Artificial Intelligence on Healthcare என்ற தலைப்பிலான கட்டுரைப்போட்டியில் இளநிலை மருந்தியல் நான்காம் ஆண்டு மாணவி ஜெ. ஜெயபிரியா இரண்டாம் பரிசினையும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்து உள்ளனர்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் 26.09.2024 அன்று நடத்திய பரிசு வழங்கும் விழாவில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார். இவ்விழாவில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறையின் இயக்குநர் முனைவர் எஸ். ஷகிலாபானு மற்றும் மருந்தாக்கவியல் துறை உதவி பேராசிரியர் ஏஞ்சலினா ஜெனிபர் சாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இச்சிறப்பிடம் பெற்ற மாணவிகளை கல்லூரி நிர்வாகத்தினர், முதல் வர், பேராசிரியர்கள் மற்றும் பணி யாளர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.