புதுடில்லி, செப்.28- மழைக்காலத்தில் காவிரி யில் கருநாடகா திறந்து விட்ட உபரிநீரை கணக்கில் கொள்ளக்கூடாது என்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மீண்டும் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 34ஆவது கூட்டம் ஆணைய தலை வர் எஸ். கே.ஹல்தார் தலை மையில் டில்லியில் நேற்று (27.9.2024) நடை பெற்றது.
இதில் 4 மாநில அதி காரிகளும் கலந்து கொண்டனர். தமி ழ்நாடு அரசு சார்பில் நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் தலைமையிலான அதி காரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசப் பட்ட விவரங்கள் குறித்து அதிகாரி மணிவாசன் செய்தியாளர்களிடம் எடுத்துக்கூறினார். அவர் தெரிவித்ததாவது:-
நீரியல் ஆண்டின் கணக்குப்படியே தண்ணீர் அளவு கணக்கிடப்படும். நீரியல் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி கடந்த ஜூன் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் இன்றைய நாள் வரை 119.46 டி.எம்.சி.தண்ணீரை கருநாடகம் தர வேண்டும். ஆனால் தற்போதுவரை 202.96 டி.எம். சி. தண்ணீர் பிலிகுண்டுலு வில் பெறப்பட்டு உள்ளது.
அதிகப்படியான இந்த தண்ணீர் மழைக்காலத்தில் வந்துள்ளது. இதை மாதா மாத கணக்கில் சேர்க்கக்கூடாது என வலியுறுத்தி இருக்கி றோம். இதுபற்றி நீண்டநேரம் விவாதம் நடந்தது. அதாவது பயிர்செய்யப்பட்ட பரப்பின் பாசனத்துக்கு ஏற்றவாறு, மழை அளவை கணக்கிட்டு முறைப்படியான தண் ணீரை வழங்கவேண்டும். உபரிநீரை கணக்கில் சேர்க்கக்கூடாது என்று சொன்னோம்.
மேகதாது அணை விவகாரம் கூட்ட நிகழ்ச்சி நிரலில் வராது. அது தொடர்பாக எந்த விவாதமும் நடை பெறவில்லை. மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஒன்றிய நீர் வளத்துறையிடம் இருந்து எந்த தகவலும் இல்லை
கருநாடக அரசு தற் போது ‘லிப்ட்’ பாசனம் என்ற பெயரில் மேடான இடங்களுக்கு கூடுதல் தண்ணீரை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தினோம். பாசனத்துக்கு வரைய றுக்கப்பட்ட நிலப்பரப்பு எவ்வளவோ அந்த அள வில் தான் பாசனத்துக்கு அனுமதிக்கவேண்டும் என்றும் தெரிவித்தோம்.
-இவ்வாறு அவர் கூறினார்.