பெருந்திரளாக மக்களை பங்கேற்கச் செய்து எழுச்சியுடன் நடத்திட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
நாகை, செப்.27- நாகை, திருவாரூர், காரைக்கால் மாவட்டங்களின் திராவிடர் கழக பொறுப்பாளர்கள் அவசர கலந்துரையாடல் கூட்டம் 25-09-2024 அன்று மாலை 6 மணி அளவில் நாகப்பட்டினம் மாவட்டம் புத்தகரம் தந்தை பெரியார் பதிப்பகத்தில் எழுச்சியோடு நடைபெற்றது நிகழ்விற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலைமையேற்று ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்தும் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை மிக எழுச்சியுடன் நடத்துவது குறித்தும் விளக்கமாக எடுத்து கூறினார்.
மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் இல.மேகநாதன், தலைமை கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் வீர.கோவிந்தராஜன், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இரா.முத்துகிருஷ்ணன், நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன், நாகை மாவட்டம் செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, திருவாரூர் மாவட்ட தலைவர் வி.மோகன், காரைக்கால் மாவட்ட செயலாளர் பொன்.பன்னீர்செல்வம், திருவாரூர் மாவட்ட செயலாளர் சவு.சுரேஷ், நாகை மாவட்ட ப.க. தலைவர் மு.க. ஜீவா ஆகியோர் முன்னிலையியேற்று உரையாற்றினர்.
நிகழ்வில் நாகை மாவட்ட துணை தலைவர் பொன்.செல்வராசு.திருவாரூர் மாவட்ட பகுத்தறிவாளர்கழக மாவட்ட தலைவர் அரங்க.ஈவேரா. ஆசிரியர் இரா.சிவகுமார்.நாகை நகர தலைவர் தெ.செந்தில்குமார்.மாவட்ட இளைஞரணி தலைவர் சு.இராஜ்மோகன்.நன்னிலம் ஒன்றிய தலைவர்இரா.தன்ராஜ். திருமருகல் ஒன்றிய விவசாய்ணி வட்டாரத் தலைவர் மருங்கூர் காமராஜ். முனுசாமி.நன்னிலம் ஓவியர்.சங்கர்.நன்னிலம் தமிழ்மணி. ஆசிரியர் சி.தங்கையன்ஆகியோர் கருத்துரையாற்றினர் இறுதியாக மாவட்ட மாணவர் கழக தலைவர் மு.குட்டிமணி அவர்கள் நன்றி கூறினார்.
கூட்டத்தில், இலங்கை சிங்கள அரசு தொடர்ந்து தமிழ்நாட்டு மீனவர்களை சிறைபிடித்தும் அவர்களின் பொருளாதாரத்தை சிதைக்கும் வகையில் வலைகளையும் மீன்பிடி கருவிகளையும் படகுகளையும் சேதப்படுத்தி வந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டு மீனவர்களை மொட்டை அடித்து அவமானப்படுத்துகின்ற செயலை இலங்கை இனவாத அரசு செய்ததை கண்டித்து தமிழர் தலைவர்,திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் தோழமை இயக்க தலைவர்கள் மீனவர் சமுதாய பிரதிநிதிகள் முன்னிலையில் 1-10-2024 அன்று மாலை நாகையில் கண்டன பேரணியோடு அவுரி திடலில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கழகத் தோழர்கள் அனைவரும் பெரும் திரளாக பங்கேற்பது எனவும் ஒத்த கருத்துடைய தோழமை இயக்க தோழர்களையும் மீனவர் கிராம மக்களையும் பெருந்திரளாக பங்கேற்க செய்து ஆர்ப்பாட்டத்தினை வெற்றி அடைய செய்வது என முடிவு செய்யப்படுகிறது.