மகப்பேறு விடுமுறைக்குப் பிறகு பெண் காவலர்கள் விருப்பப் பகுதியிலேயே பணியமர்த்தப்படுவர் அரசாணை வெளியீடு

1 Min Read

சென்னை, செப்.27 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்கள் மற்றும் பெண் காவல் அதிகாரிகள் ஒரு ஆண்டு மகப்பேறு விடுமுறை முடிந்து, பணிக்கு திரும்பும் போது அவர்களின் குழந்தைகளை பராமரிப்பதற்கு வசதியாக, அவர்கள் மகப்பேறு விடுமுறையில் இருந்து பணிக்குத் திரும்பிய பிறகு அவர்களுடைய பெற்றோர்களோ அல்லது கணவர் வீட்டைச் சேர்ந்தவர்களோ வசிக்கும் மாவட்டங்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு பணி மாறுதல் வழங்கப்படும் என ஆணை பிறப்பித்துள்ளார். அவரது ஆணைக்கிணங்க அரசு உத்தரவினை நிறைவேற்றும் வகையில் சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 19 பெண் காவலர்கள் அவர்களது விருப்பப்படி சென்னை பெருநகர காவலில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் பணிமாறுதல் ஆணையினை பெற்று சென்றுள்ளனர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *